விஜய்க்காக நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த இளசுகள்

By Siva

சென்னை: விஜய் தேவரகொண்டாவுக்காக இளசுகள் நேற்று பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்த்துள்ளனர்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி அவ்வளவாக சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனம் கடைசி வரை எழுந்து கொண்டே இருக்கிறது. இது பிக் பாஸுக்கும் புரிந்ததால் தான் கடைசியில் முன்னாள் போட்டியாளர்களை திரும்ப அழைத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு கலை, அசோக் செல்வன், கிருஷ்ணா, சுனைனா வந்தபோதிலும் விஜய் தேவரகொண்டா தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் டிரோபியுடன் வீட்டிற்குள் வந்த விஜய் தேவரகொண்டாவை பார்த்து ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜி ஆகியோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எல்லா உன்னாவு என்று விஜய் தெலுங்கில் கேட்பார் என்று எதிர்பார்த்தால் எப்படி இருக்கீங்க லேடீஸ் என்று தமிழில் பேசி ஆரம்பத்திலேயே அசத்திவிட்டார். விஜய் பேசியதை பார்த்து அவரின் ரசிகைகள் எல்லாம் உருகிவிட்டனர்.

அழகு

அழகு

நீ வீட்டுக்கு போகலாம், உங்க வீட்டுக்குப் போகலாம் என்று விஜய் தமிழில் பேசியதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. நோட்டா படத்தில் 4 பக்க வசனத்தையே தமிழில் பேசியிருக்கிறார். அவர் அந்த வசனங்களை பேசியதை பார்த்து சத்யராஜே அசந்துவிட்டார் என்றால் பாருங்களேன். நோட்டா படம் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ரசிகைகள்

ரசிகைகள்

அர்ஜுன் ரெட்டி படத்தை பார்த்தே விஜய்க்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்துவிட்டனர். கீத கோவிந்தம் படம் ரிலீஸானபோது மொழி புரியாவிட்டாலும் விஜய்க்காக பார்த்தார்கள். அய்யோ விஜய் வருகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று ரசிகைகள் நேற்று ஆவலுடன் காத்திருந்தனர். அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் தான் விஜய்யை பார்க்கத் துடித்தனர்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

3 மாதங்களாக நீங்கள் இந்த வீட்டில் இருக்கிறீர்கள். வெளியே நிறைய விஷயங்கள் நடந்துள்ளது உங்களுக்கு தெரியுமா என்று விஜய் பிக் பாஸ் போட்டியாளர்களை பார்த்து கேட்டார். யார் ஜெயிப்பார் என்று நினைக்கிறீர்கள் என்று விஜய் கேட்டதற்கு ரித்விகா என்று போட்டியாளர்கள் தெரிவித்தனர். தன் படத்தை ப்ரொமோட் செய்ய வந்ததாக விஜய் அவர்களிடம் தெரிவித்து விளம்பரம் தேட எப்படி பேச வேண்டும் என்று டிப்ஸ் கொடுக்குமாறு கூறினார்.

பேச்சு

பேச்சு

பிக் பாஸ் டிரோபியை ஒவ்வொருவரிடமாக கொடுத்து வெற்றி பெற்றால் என்ன சொல்வீர்களோ அதை தற்போதே பேசுங்கள் என்று கூறி பேச வைத்தார் விஜய். பாவம் கொஞ்ச நேரத்தில் வெளியேற்றப்படுவது தெரியாமல் ஜனனி சந்தோஷமாக அந்த டிரோபியை வாங்கிக் கொண்டு பேசினார். கமலை மேடையில் நேரில் பார்க்க வேண்டும் என்று விஜய் கூறியதை கேட்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சி கரகோஷமிட்டனர்.

வாழ்த்து

வாழ்த்து

மேடைக்கு வந்த விஜய்யை பார்த்து அரங்கமே அதிர்ந்தது. கமலை பார்த்த மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே இருந்தார் விஜய். லைட்டா தவறாக பேசினாலும் அவ்வப்போது தமிழில் பேசினார் அவர். நோட்டா வெற்றி பெற வாழ்த்துக்கள் என்ற கமல் நான் இவரின் படத்தை சொல்கிறேன் என்று கூறி அங்கும் அரசியல் பன்ச் வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X