மேடையில் கதறி அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன சக நடிகை !

சென்னை : விஜய் சின்னத்திரை விருது வழங்கும் விழாவில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா ஷெட்டி கதறி அழுது அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைத்துவிட்டார்.

பாக்யலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இரவு 8.30 மணி ஆகிவிட்டால் போதும் இல்லத்தரசிகள், சரியாக டிவி முன்பு ஆஜராகி விடுவார்கள்.இந்த தொடரில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா ஷெட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.

விவாகரத்து செய்த கோபி

விவாகரத்து செய்த கோபி

பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். பிடிக்காத மனைவியுடன் வாழ்ந்து வருவதாக பொய்யை கூறியே ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார் கோபி. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தர பாக்யாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் கோபிக்கு எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பாக்கியாவிற்கு தெரியாமலே அவரிடம் கையெழுத்து வாங்கி, அடுக்கடுக்காக பொய் சொல்லி ஒருவழியாக கோர்ட்டுக்கு கூட்டி சென்று விடுகிறார். இப்போது தான் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு அதிகரித்து வருகின்றது எனலாம். கோபி எப்போது குடும்பத்தினரிடம் சிக்குவார், அவரின் தவறு எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மேடையிலே அழுதார்

மேடையிலே அழுதார்

இந்நிலையில், விஜய் சின்னத்திரை விருது வழங்கும் விழாவில், ஃபேவரெட் நாயகிக்கான விருது சுசித்ரா ஷெட்டிக்கு கிடைத்துள்ளது. அதைப் பெற்றுக் கொண்டு சுசித்ரா, தமிழ் மக்களுக்கு நன்றி, நம் உழைத்துக்கொண்டே இருந்தால் சரியான அங்கீகாரம் கிடைக்கும் என எனது அம்மா கூறுவார்கள். அம்மா சொன்னது போல இப்போது இந்த விருது கிடைத்துள்ளது. ஆனால், இதைப் பார்க்க எனது அம்மா இல்லை என மேடையிலேயே கண் கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X