பங்கமாக கலாய்க்கப்பட்ட விஜய் படம்! காமெடியா இருந்தாலும்... அறந்தாங்கி நிஷாவுக்கு தைரியம்தான்!

By Mohan Raj

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகப்படியான ரியாலிட்டி ஷோக்களைக் கொடுத்து ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளில் விஜய் டீ.வி யும் ஒன்று. இதில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர், நியா நானா, பிக் பாஸ், சூப்பர் சிங்கர் ஜூனியர், குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டீ.வியில் முதலில் ஒளிபரப்பப்பட்டு அதன் பின்னர் கைவிடப்பட்டு தற்போது மீண்டும் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி அது இது எது நிகழ்ச்சி.

சிவகார்த்திகேயன்: அது இது எது நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டபோது தற்போது சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்தார். சிவகார்த்திகேயனை தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி அது இது எது நிகழ்ச்சிதான். தொடக்கத்தில் அது இது எது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் விஜய் டீ.வியின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக மாறிவிட்டார். ஒரு கட்டத்தில் விஜய் சினிமா விருதுகளை தொகுத்து வழங்கும் அளவிற்கு உயர்ந்தார். 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜின் மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Television Adhu Idhu Yedhu VijayTV Aranthangi Nisha Erode Magesh Madurai Muththu Comedy Show

அது இது எது நிகழ்ச்சி: 2009ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சி அதன் பின்னர் நிறுத்தப்பட்டது. சிவகார்த்திகேயன் சினிமாவில் முழு மூச்சாக நடிக்க ஆரம்பித்த பின்னர் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்தவர் மா.க.பா. ஆனந்த். 2019 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் என கூறப்பட்டு மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரையிலான பிரபலங்கள் விருந்தினர்களாக கலந்து கொள்வதுண்டு. இதில் இவர்களுக்கு கொடுக்கப்படிம் டாஸ்க்குகளில் அதிக வெற்றிகளைப் பெறுபவர்கள் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் இந்தவாரம் விஜய் டீ.வி பிரபலங்களான ஈரோடு மகேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக இருந்த அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Vijay Television VijayTV Aranthangi Nisha Comedy Show

இந்த வாரம்: அது இது எது நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்த ஒரு ஷெக்மெண்ட் என்றால் அது சிரிச்சா போச்சு. இந்த சுற்றில் விருந்தினர்களுக்கு சிரிப்பு வரவழைக்கும் படியான சவால்கள் கொடுக்கப்படும். ஆனால் அதில் சிரிக்காமல் இருப்பவர் வெற்றி பெறுவார். அதேபோல் மற்றொரு ஷெக்மெண்ட் குரூப்புல டூப்பு.

Vijay Television VijayTV Aranthangi Nisha Comedy Show

இதில் மூன்று பேர் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தப்படுவார்கள். ஆனால் அதில் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்ட துறைக்கு சம்பந்தமில்லாதவராக இருப்பார். அவரைக் கண்டுபிடிக்கும் போட்டியாளர் அந்த சுற்றின் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார். அவ்வகையில் இந்த வாரம் அது இது எது நிகழ்ச்சிக்கான புரோமோவை விஜய் டீவி வெளியிட்டுள்ளது. அதில், மூன்று பேர் புலி வேடம் போட்டு வந்துள்ளனர். அவர்கள் வரும்போது விஜய் நடிப்பில் வெளியான வேட்டைகாரன் படத்தில் இடம் பெற்ற புலி உறுமுது பாடல் ஒளிபரப்பப்பட்டது.

Vijay Television VijayTV Aranthangi Nisha Comedy Show

அந்த பாடலில் வராம் பாரு வேட்டைக்காரன் என்ற வரி ஒலிபரப்பப்பட்டபோது அறந்தாங்கி நிஷா, மூனு பேரும் நல்லா தோட்டக்காரன் மாதிரி இருந்துட்டு வேட்டைக்காரனாம் என கமெண்ட் அடித்துள்ளார். மேலும் அந்த புரோமோவில் வேட்டைக்காரனாக மதுரை முத்து வருகின்றார். அதேபோல் போதிதர்மன் வேடத்தில் ராமர் வருகின்றார். ராமரைப் பார்த்ததும் அறந்தாங்கி நிஷா கைதட்டிச் சிரிக்கின்றார். இவற்றையெல்லாம் நாளை அதாவது ஜூன் 9ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள அது இது எது நிகழ்ச்சியில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது போல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X