»   »  விஜய் டெலி அவார்ட்ஸ்: 'ஆபிஸ்' கார்த்திக்-ஸ்ருதி சிறந்த சின்னத்திரை ஜோடி

விஜய் டெலி அவார்ட்ஸ்: 'ஆபிஸ்' கார்த்திக்-ஸ்ருதி சிறந்த சின்னத்திரை ஜோடி

Subscribe to Oneindia Tamil

விஜய் டிவியின் சின்னத்திரை விருது வழங்கும் விழாவில் சிறந்த காதல்ஜோடியாக ஆபிஸ் சீரியலில் நடித்த கார்த்திக் ஸ்ருதிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், சீரியல், ரியாலிட்டிஷோ நிகழ்ச்சிகளில் சிறந்தவை எவை, மனம் கவர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்,தொகுப்பாளினி யார் யார் என்பதை தேர்வு செய்ய கடந்த சிலவாரங்களாக நேயர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நேயர்களினால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை மாலை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவில் சின்னத்திரை நட்சத்திரங்களும், சினிமா பிரபலங்களும் பங்கேற்றனர்.

கோபிநாத் – திவ்யதர்சினி

கோபிநாத் – திவ்யதர்சினி

சிறந்த தொகுப்பாளராக கோபிநாத், சிறந்த தொகுப்பாளினியாக திவ்யதர்சினியும் தேர்வு செய்யப்பட்டு விருதினைப் பெற்றனர்.

நீயா நானா, சூப்பர் சிங்கர்

நீயா நானா, சூப்பர் சிங்கர்

சிறந்த விவாத நிகழ்ச்சியாக நீயா நானா தேர்வு செய்யப்பட்டது. சிறந்த ரியாலிட்டி ஷோவாக சூப்பர் சிங்கர் தேர்வு செய்யப்பட்டது.

ஆஜித்-பிரகதி

ஆஜித்-பிரகதி

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆஜித் சிறந்த ஜூனியர் பாடகராகவும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து போட்டியில் பங்கேற்ற பிரகதி சிறந்த ஜூனியர் பாடகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

விஷ்ணு-லட்சுமிக்கு விருது

விஷ்ணு-லட்சுமிக்கு விருது

ஆபிஸ் தொடரில் நடித்த விஷ்ணு சிறந்த காமெடியனாக தேர்வு தேர்வு செய்யப்பட்டார். அதேபோல சீரியல் அல்லாத நிகழ்ச்சியான அது இது எது நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரோபோ சங்கர் சிறந்த காமெடியனாக தேர்வு செய்யப்பட்டார். மனம் கவர்ந்த நாயகியாக ஆபிஸ் தொடரில் லட்சுமியாக நடிக்கும் மதுமிலா தேர்வு செய்யப்பட்டார்.

மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா

மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மிர்ச்சி செந்தில் சிறந்த ஹீரோவாகவும், அதே தொடரில் நடித்த ஸ்ரீஜா சந்திரன் சிறந்த கதாநாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கார்த்திக் ஸ்ருதிராஜ்

கார்த்திக் ஸ்ருதிராஜ்

சின்னத்திரை நேயர்களின் மனம்கவர்ந்த ஜோடி விருதினை ஆபிஸ் சீரியலில் நடித்த கார்த்திக் - ஸ்ருதிராஜ் ஜோடி தட்டிச்சென்றது.

மாகாபா ஆனந்த்

மாகாபா ஆனந்த்

சிறந்த பொழுதுபோக்கு தொகுப்பாளர் விருது மாகாபா ஆனந்திற்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருது சூப்பர் சிங்கரின் ஆனந்த் வைத்தியநாதனுக்கு கொடுக்கப்பட்டது.

மனோ – சித்ரா

மனோ – சித்ரா

சிறந்த நடுவர்களாக மனோ - சித்ரா தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு விருது சரவணன் மீனாட்சியில் நடித்த ராஜசேகர் - குயிலி ஜோடிக்கு வழங்கப்பட்டது.

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறந்த சீரியல்களாக சரவணன் மீனாட்சி, தெய்வம் தந்த வீடு தேர்வு செய்யப்பட்டது.

சிவகார்த்திக்கேயன் – ராதா

சிவகார்த்திக்கேயன் – ராதா

ப்ரைடு ஆப் விஜய் டிவி விருது சிவகார்த்திக்கேயனுக்கு வழங்கப்பட்டது. விஜய்டிவியின் எலிகண்ட் லேடியாக நடிகை ராதா தேர்வு செய்யப்பட்டார்.

29 பிரிவுகளில் விருதுகள்

29 பிரிவுகளில் விருதுகள்

விஜய் சின்னத்திரை விருதுகள் 29 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டது. கவுரவ விருது யூகிசேதுவுக்கு வழங்கப்பட்டது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Vijay TV has launched 'Sunfeast Farmlite Vijay Television Awards powered by Karbonn Smart A5s' that was held on 24 May 2014 at YMCA Nandanam, Chennai. It was a memorable evening when the entire constellation of Vijay TV's most popular stars were descended on a single platform and set the stage ablaze with breathtaking performances. Vijay Television Awards will be telecast during second week of June 2014.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more