இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது..பிபி ஜோடியில் அபிஷேக் டான்சை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடுக்கான புதிய புரமோ வெளியாகி உள்ளது. இதில், அபிஷேக் ராஜா மற்றும் நாடியா சாங் ஆடிய டான்சை பார்த்து இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

Recommended Video

Abhishek இயக்கப்போகும் சர்ச்சைக்குரிய படம் | Filmibeat Tamil

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் அதில் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிப்பரப்பாக தொடங்கும். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 ஒளிப்பரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு பிபி ஜோடிகள் முதல் சீசன் ஒளிப்பரப்பானது. இதில் ஷாரிக் - அனிதா ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக இருந்தனர்.

பிபி ஜோடிகள் சீசன் 2

பிபி ஜோடிகள் சீசன் 2

பிக் பாக் சீசன் 5 கடந்த ஜனவரியில் முடிவடைந்தது, இதில், ராஜு டைட்டிலை வென்ற நிலையில், பிரியங்கா இரண்டாவது இடத்தையும், பாவ்னி மூன்றாவது இடத்தையும் பெற்றனர். பிக் பாக் சீசன் 5 கலந்து கொண்டவர்கள் தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் நடுவராக உள்ளனர்.

அச்சு அசல் பெண்ணாக

அச்சு அசல் பெண்ணாக

இந்த நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா மற்றும் நாடியா சாங் ஆகியோர் இணைந்து நடனமாடி வருகின்றனர். கடந்த வாரம் நடந்த உல்டா ரவுண்டில் ஆண் போட்டியாளர்கள் எல்லாம் பெண்ணாகவும், பெண் போட்டியாளர்கள் ஆணாகவும் மாறினர். இதில், அபிஷேக் ராஜா நீலாம்பரியாக அச்சு அசல் பெண்ணாகவே மாறி மின்சார பூவே பாடலுக்கு நடனமாடி பாராட்டை பெற்றிருந்தார்.

கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில், பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய புரமோ வெளியாகி உள்ளது. அந்த புரமோவில் அபிஷேக்கும் நாடியாவும் வாலி படத்தில் வரும் நிலவைக் கொண்டுவா பாடலுக்கு நடனமாடி உள்ளனர். அந்த பாடலில் அபிஷேக் கண்டமேனிக்கு கையையும் காலையும் ஆட்டி டான்ஸ் ஆடியுள்ளார். இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்ஸ் இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது என கிண்டலடித்து வருகின்றனர்.

கண்டென்ட் ராஜா

கண்டென்ட் ராஜா

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் இணைந்து மினி அன்பு டீம் ஆரம்பிச்சி நெட்டிசன்ஸ்களுக்கு கண்டென்டை வாரிக்குவித்து கண்டென்ட் ராஜாவாக இருந்தார் அபிஷேக் ராஜா. ஓவராக ஆட்டம் போட்டதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போதும், பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏடாகூடமாக டான்ஸ் ஆடிய அபிஷேக் ராஜாவை ரசிகர்கள் வெச்சி செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X