மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள்!

சென்னை: தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "சின்ன மருமகள்". இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இந்த இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பெண்களை மையப்படுத்திய வரும் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த வாரம், வீட்டை விட்டு வெளியே வந்து, கணவனையும் தகப்பனையும் உதறி, தன் கனவைச் சாதிக்க தமிழ்செல்வி மேற்கொண்ட பயணம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்றை பெற்றது.

Chinna Marumagal Review
Photo Credit:

சின்ன மருமகள்: இந்நிலையில், இந்த வார எபிசோடில், தமிழ்செல்வி மருத்துவராகும் தன் கனவை நிறைவேற்ற, அவளுக்குத் தேவைப்படும் ஒரு லட்சம் ரூபாயைத் திரட்ட, மொய் விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். அவளின் திட்டத்தை உடைக்க சாவித்திரி வேறு ஒரு திட்டத்தை போடுகிறாள். உங்க வீட்டு மருமகள் உங்க பெயரையும் கௌரவத்தையும் கொடுக்கும் அளவிற்கு, மொய் விருந்துவைத்து பிச்சை எடுத்தா, உங்க கௌரவம் என்ன ஆகும். அதனால் தான் நான் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்து இருக்கிறேன். ஒரே ஊருல ஒரு இடத்தில் நெல்லு சோறும், சாம்பாரும் வைத்து விருந்து வெச்சா, கஞ்சிக்கு செத்த கூட்டம் கிடா விருந்துக்குத்தான் வரும். இதனால், தமிழ்செல்வி சமைத்த சோத்தை தூக்கி குப்பையில போட்டுட்டு, தலையில் துணியை போட்டுக்கிட்டு உக்கார வேண்டியது தான் என்கிறாள்.

தமிழ்செல்வி ஜெயிப்பாளா: கிடா விருந்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. மறுபக்கம், தமிழ்செல்வி, நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் அதற்கு பணம் தேவை. எப்படியாவது அந்த பணத்தை கொடுத்துவிடு என கடவுளிடம் தமிழ் செல்வி கண்ணீர் மல்க வேண்டுகிறாள். அதே போல, மொய் விருந்துக்கு வந்த கூட்டம், கிடா விருந்து எங்கே என கேட்டு விட்ட அங்கே சென்று விடுகின்றனர். சாவித்திரியை எதிர்த்து தமிழ்செல்வி ஜெயிப்பாளா? தன் கனவைச் சாதிக்க ஒரு லட்சம் பணத்தை அவளால் திரட்ட முடியுமோ? என பரபரப்பு திருப்பங்களுடன், இந்த தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்செல்வி, தற்போது ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக மாறியுள்ளார். தமிழக மக்கள் அவளை தங்கள் வீட்டுப் பெண்ணாகப் பார்க்கிறார்கள். அவளது கனவு ஜெயிக்குமா ? என ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள். தமிழசெல்வியின் இந்த பரபரப்பான பயணத்தைத் தெரிந்து கொள்ள, இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் 9.30 மணிக்கும் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X