பாவம்பா மணிமேகலை.. விஜய் டிவி இப்படி செய்யக்கூடாது.. குக் வித் கோமாளியில் மாற்றம்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதால், தங்களது டிஆர்பியை தக்கவைத்துக்கொள்ள விஜய் டிவி சில மாற்றத்தை செய்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தொடர்கள், கேம் ஷோ, பாட்டு நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ என எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பு இருக்குமோ அதே அளவிற்கு, குக் வித் கோமாளிக்கு ரசிகர்கள் இருப்பதால், நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செஃப் தாமு, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக உள்ளனர்.

cook with comali season 5 Vijay tv manimegalai

குக் வித் கோமாளி சீசன் 5: குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரக்ஷனும் மணிமேகலையும் இருந்தனர். நடிகை சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, யூடியூபர் இர்ஃபான், அக்‌ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த சீசனில் குக்குகளாக களமிறங்கினர். கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர். இதில் டேஞ்சர் சோனில் இருந்த டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் சோயா முதல் நபராக வெளியேற்றப்பட்டார்.

பாவம் மணிமேகலை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இதனால், அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனால், விஜய் டிவி குக் வித் கோமாளியில் ஒரு மாற்றத்தை செய்து இருக்கிறது. அதாவது, கோமாளியாக இருந்து, அதன் பின் ஷோவுக்கு தொகுப்பாளராக மாறிய மணிமேகலையை மீண்டும் கோமாளியாக மாற்றி இருக்கிறது.

இதுகுறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவை பார்த்த மணிமேகலையின் ரசிகர்கள் பாவம் மணிமேலை என்றும் விஜய் டிவி அவங்களை வெச்சு செய்றீங்க, அவங்க எப்போதும் கோமாளி தானா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X