கோலாகலமாக நடந்த வளைகாப்பு விழா.. அப்பாவாகப்போகும் விஜய் டிவி புகழ்!

சென்னை: விஜய் டிவி புகழ் மனைவியின் வளைகாப்பு விழாவை கோலாகலமாக கொண்டாடினார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

விஜய் டிவி புகழ் தான் காதலித்த பென்சி என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகள் கடந்த வாரம் முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில், அவர் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருந்தார்.

Vijay television fame celebrated his wifes baby shower function

குத் வித் கோமாளி: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமானார் புகழ். சின்ன கேரக்டர் மூலம் வெள்ளி திரைக்கு வந்த இவர் தொடர்ந்து சிரிக்க வைத்து தமிழ் சினிமாவிலும் காமெடியனாக களமிறங்கி வலிமை, சபாபதி, டிஎஸ்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மகிழ்ச்சியான செய்தி: புகழ் - பென்சி தம்பதிகள் கடந்த வாரம் முதலாவது திருமண நாளை கொண்டாடிய நிலையில் பென்சி கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை புகழ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வளைகாப்பு திருவிழா: இந்நிலையில், இன்றைய தினம் தன்னுடைய மனைவியின் வளைகாப்பு நிகழ்வைக் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதில் விஜய் டிவி பிரபலங்களான சிவாங்கி, நாஞ்சில் விஜயன் தனது புதுமனைவியுடன் வந்திருந்தார். மேலும், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கதாநாயகனாக: தற்போது, இவர் யோகி வீர் பிக்சர்ஸ் சார்பில், ஸ்ரீராம் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை எம்.ஜே இளன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் கதையானது, காதலில் விழுந்து தன்னை வருத்திக் கொள்ளும் இளைஞர்களை பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X