என்னை பற்றி ஏன் பேசுறீங்க.. ட்விட்டரில் விமர்சித்த நபருக்கு.. சரியான பதிலடி கொடுத்த சிவாங்கி!

சென்னை : ட்விட்டரில் தன்னை கிண்டலடித்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சிவாங்கி.

Recommended Video

Shivangi-ஐ Twitter-ல் விமர்சித்த நபர்... ஆத்திரமடைந்த Shivangi *Celebrity | Filmibeat Tamil

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்துள்ளார் சிவாங்கி.

தற்போது சிவாங்கி ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி இருக்கிறது.

நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது

நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். முதலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது சமையல் நிகழ்ச்சியில் கோமாளிக்கு என்ன வேலை என நினைக்க வைத்தது. ஆனால், இந்த நிகழ்ச்சி பலரின் கவலையை மறந்து சிரிக்கும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார்.

சிவாங்கி கலந்து கொள்ளவில்லை

சிவாங்கி கலந்து கொள்ளவில்லை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. தற்போது நிகழ்ச்சியில் புகழுக்கு நிகராக சிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார். பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் சிவாங்கி. போனவாரம் வெளியான ஷோவில் சிவாங்கி வரவில்லை. அதனால் இந்த வார நிகழ்ச்சியில் சிவாங்கி கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தவாரமும் கலந்து கொள்ளவில்லை

இந்தவாரமும் கலந்து கொள்ளவில்லை

ஆனால் இந்த வார நிகழ்ச்சியிலும் சிவாங்கி வரவில்லை. அண்ணனின் திருமணத்திற்காக சென்றுள்ளதால் சிவாங்கி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவருக்கு பதிலாக சரத் அவர்கள் இந்த வார கோமாளியாக பங்கேற்று இருக்கிறார் என்ற காரணத்தை நேற்றைய எபிசோடில் தொகுப்பாளர் ரக்க்ஷன் கூறியிருந்தார்.

நெத்தியடி பதில்

நெத்தியடி பதில்

இந்நிலையில், குக் வித் கோமாளி ரசிகர்கள் ஒருவர் டிவிட்டரில் இந்த வாரம் சிவாங்கி வரவில்லை. இதனால் ஓவர் நடிப்பு இருக்காது என்பது போல பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிவாங்கி, இல்லாத என்ன பத்தி வெறுத்து பேசுவதற்கு இருக்குற செம்ம கோமாலிஸ் பத்தி பேசுனா இன்னும் சூப்பர் இருக்கும் யோசித்துப் பாருங்கள்"ப்ரோ என பதிவிட்டுள்ளார். சிவாங்கிய விமர்சித்த அந்த நபரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X