பெண்களை வார்த்தையால் கற்பழிக்கிறார்கள்.. அறந்தாங்கி நிஷா மன வேதனை!

சென்னை: கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா, பெண்களை வார்த்தையால் காயப்படுத்தி விடுகிறார்கள், நேரடியாக கற்பழிப்பது வேற, வார்த்தையால் கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம், இதை இயல்பாக பெண்கள் மீது திணிக்கிறார்கள் என்று அறந்தாங்கி நிஷா பேட்டியில் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் அனைவரையும் சிரிக்க வைத்து அழகு பார்ப்பவர் அறந்தாங்கி ரிஷா. இவர், ரியாலிட்டி ஷோ, யூடியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என எப்போதும் செம பிஸியாகவே இருப்பார். அண்மையில், மிக்ஜாம் புயல் பாதிப்பில் மக்கள் இருக்க அறந்தாங்கி நிஷா திருச்சியில் இருந்து மக்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து மக்களுக்கு உதவி செய்து செய்தார்.

vijay television famous aranthangi nisha emotional interview

அறந்தாங்கி நிஷா: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அறந்தாங்கி நிஷா, புயல் பாதித்த போது நான் சென்னையில் தான் படப்பிடிப்பில் இருந்தேன் அப்போது, திருச்சிக்கு போன பிறகு தான் மழை இன்னும் கடுமையாச்சு உடனே, திருச்சியில் என்னால் எவ்வளவு பொருட்களை வாங்க முடியுமோ அவ்வளவு பொருட்களை வாங்கி, காரில் எடுத்துக்கொண்டு வந்து சென்னையில் மழையால் பாதித்தவர்களுக்கு கொடுத்தேன். அந்த நேரத்தில் என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஐசியூவில் இருந்தான். அப்போது எனக்கு துணையாக என் கணவர் வந்தார்.

வார்த்தையால் கற்பழிக்கிறார்கள்: சென்னை மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு, ஒன்றுமே தெரியாத நிஷாவை இந்த இடத்திற்கு கொண்டுவந்தவர்கள் அவர்கள் தான், சென்னை மக்கள் எனக்கு கொடுத்ததை நான் அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறேன். இருந்தாலும், சமுதாயத்தில் இருப்பவர்கள் எங்களை இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் வார்த்தையால் காயப்படுத்தி விடுகிறார்கள். நேரடியாக கற்பழிப்பது வேற, வார்த்தையால் கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம், இதை இயல்பாக பெண்கள் மீது திணிக்கிறார்கள்.

வேதனையா இருக்கு: நான் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எதை செய்தாலும், விளம்பரத்திற்காக செய்கிறீர்கள் என்று விமர்சிக்கிறார்கள். விளம்பரத்திற்காக செய்து நான் என்ன சிஎம் ஆக போகிறேனா? இல்லை பிஎம் ஆகபோறேனா? அடுத்து நான் ஒரு மேடையில் பேச போகிறேன். நீங்க கொடுக்கும் பணத்தில் சாப்பிடப்போகிறேன். சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களை ஏன் காயப்படுத்திக்கிட்டே இருக்கிறீர்கள். இந்த காயம் என் மனதைவிட்டு ஆரவே இல்லை.

இந்த சமூதாயம் பெண்களை ஏன் இப்படி பார்க்கிறது. பெண் செய்தால் மட்டும் ஏன் கேவலப்படுத்துறீங்க. இதே வேறு யாராவது செய்து இருந்தால், அவர்களை புகழ்ந்து பேசுகிறீர்கள் இந்த கோவம் என் மனதிற்குள் நிறைய இருக்கிறது என்று அறந்தாங்கி நிஷா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X