KPY பாலாவுக்கு விரைவில் காதல் திருமணம்… காதலி யார்?
சென்னை: இலவச ஆம்புலன்ஸ், புயல் நிவாரணம் உதவி, இலவச சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவி செய்து வருகிறார் KPY பாலா. பலரை சிரிப்பால் மகிழ்வித்து வந்த பாலா, தற்போது உதவி செய்து பலரை மகிழ்வித்து வருகிறார். தற்போது இவர் தனது திருமணம் குறித்து மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் பாலா. ரைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெட்டுக்கிளி..வெட்டுக்கிளி என புகழுடன் இவர் செய்த அட்டகாசத்தை எப்போது நினைத்தாலும் சிரிக்கை அடக்க முடியாது.

முடிந்த உதவி: குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் தொகுப்பாளராக அவதாரம் எடுத்த பாலா, பல்வேறு இசைவெளியீட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவிலும் பாலாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி பிசியாக இருக்கும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு, இலவச ஆம்புலன்ஸ் என தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
விரைவில் டும் டும் டும்: இந்த நிலையில், தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட பாலா, தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், இந்த விழாவில் மாணவ மாணவிகளுடன் திரை இசை பாடலுக்கு குத்தாட்டம் போட்டு கொண்டாடிய பாலா, பல்வேறு நடிகர்களின் குரல்களில் பேசி அசத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய பாலா, தனக்கு அடுத்த மாதம் காதல் திருமணம் நடைபெற உள்ளதாக கூறினார். இப்போது கூடி இருந்த மாணவர்கள் காதலி யார் என்று கேட்டு கத்த அதற்கு சிரிந்துக்கொண்டஇருந்தார்.
Dont Touchனு சொல்லிதாங்க: இதைத்தொடர்ந்து பேசிய பாலா, புச்சேரி சிறுமியின் இறப்பு குறித்து பேசி இருக்கும் பாலா 'எப்போதும் Good Touch, Bad Touch சொல்லித் தருவது போல Dont Touch என்பதையும் சொல்லித் போல வேண்டும். என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி நடப்பது தான் பிரச்சனை. ஈவு இறக்கமற்ற நபர்களால் நடக்கும் விஷயங்கள் தான் இது.


Click it and Unblock the Notifications











