Neeya Naana: என்னை பத்தி தெரியும்ல..ஏன் என்னை விட்டுட்டு போனீங்க.. நீயா நானாவில் கண்கலங்கிய பெண்!

சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியல் என்றாலும், கேம் ஷோ என்றாலும், காமெடி நிகழ்ச்சி என்றாலும் வித்தியாசம் இருக்கும் என்பதால், இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே தனி கூட்டம் இருக்கிறது. அப்படி ரசிகர்களை கட்டிப்போட்ட நிகழ்ச்சி தான் நீயா நானா.

இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆனாலும், இந்த நிகழ்ச்சி மீதான ஆர்வம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. வாரந்தோறும் வித்தியாசமான தலைப்புகளுடன் வரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒரு தலைப்பில் இருவேறு கருத்துடையவர்களையும் பேசவிட்டு, அவற்றில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யங்களையும் கேள்விகளை ஏற்படுத்துவதில் தேர்ந்தவரான கோபிநாத் முக்கியமான அம்சமாக உள்ளார்.

vijay Television Gopinaths neeya naana january 28 today episode

மணமுறிவு செய்த பெண்கள்: இந்த வாரமும் இந்த நிகழ்ச்சி சிறப்பான தலைப்புடன்தான் களமிறங்கவுள்ளது. இதில் மணமுறிவு செய்த பெண்கள் ஒருபுறமும், பொது மக்கள் ஒருபுறமும் கலந்து கொண்டு பேசினார்கள். தொட்டதற்கு எல்லாம் விவாகரத்து, மன கசப்பு, ஈகோ, சண்டை போட்டுக்கொண்டு அழகான திருமண வாழ்க்கை தொலைந்துக்கொண்டு இருக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இந்த நிகழ்ச்சி தேவையான ஒன்றாக இருந்தது.

பிரிவுக்கு ஈகோதான் காரணம்: இதில் பேசிய ஒரு பெண், 2018ம் ஆண்டு என் கணவரை விட்டு பிரிந்தேன். ஆனால், இப்போதும், நான் அவரை காதலித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க இரண்டு பேருக்கும் ஈகோ தான் பிரச்சனை இரண்டு பேரும் அதை சரி செய்யப் பார்த்தோம். ஆனால், முடியாததால் பிரிந்துவிட்டோம். அப்போது, ஏன் அப்படி செய்தோம் என்று நினைக்க தோன்றுகிறது. இதனால், குடும்பமே பிரிந்துவிட்டது.

ஏன் என்னை விட்டுட்டு போனீங்க: அவசரப்பட்டு விட்டோமோ என்று இப்போது நினைக்கிறேன், இரண்டு பேரும் உட்கார்ந்து பேசி இருக்கலாமே என்று தோன்றுகிறது. இருவரும் சில நாட்கள் பிரிந்து இருந்தால், எங்களின் பிரிவு எங்களை சேர்த்து இருக்கும், ஆனால், அதே கோபத்தோடு கோர்ட்டுக்கு போய், அவசர அவசரமாய் எல்லாமே முடிந்துவிட்டது. இத்தனை வருஷத்தில் நான் அவரை ஒரு முறைக்கூட சந்திக்கவில்லை. இனி அவரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், ஏன் என்னை விட்டுட்டு போய்டீங்க என்று கேட்பேன், என்னை பற்றி உங்களுக்கு நல்ல தெரியும்ல என்று கேட்பேன் என்றார். காலப்போக்கில் என் மகனுக்கு 23 வயதாகி விட்டது, என் மகனின் திருமணத்திற்கு நிச்சயம் அவரை கூப்பிடுவேன் என்று அந்த பெண் கண்கலங்கி பேசியது நிகழ்ச்சியை பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது. ஆத்திரத்திலும், கோபத்திலும் திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு, ஆண்டுகள் செல்ல செல்ல ஏன்டா இப்படி செய்தோம் என்று காலம் புரிய வைத்து விடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X