காவேரியின் வாழ்க்கையை கெடுக்க ராகினி போட்ட பிளான்..மகாநதி சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் மகாநதி தொடரும் ஒன்றாகும். திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், லக்ஷ்மி ப்ரியா,காவியா, சுஜாத சிவகுமார், அதிதீ சௌந்தர்யா, ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், ராகினியின் அப்பா பசுபதி, அஜய்யையும் அவனது அப்பாவையும் ஓட்டலுக்கு அழைத்து, ராகினிக்கு உங்க மகன் அஜய்யை ரொம்ப பிடித்து இருக்கு, எத்தனையோ மாப்பிள்ளை பார்த்தேன். வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவள் இன்று அஜய்யை திருமணம் செய்து கொள்ள ஒகே சொல்லி இருக்கா என்று சொல்ல, அஜய்யின் அப்பாவுக்கும் எனக்கும் சம்மதம் என்று சொல்லிவிடுகிறான் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகாநதி இன்றைய எபிசோட்: இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வரும் விஜய்யின் சித்தப்பா, தாத்தாவிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்ல, உடனே என்ன, எதாவது பணம் வேணுமா என் கிட்ட பணம் எல்லாம் இல்ல, எல்லாத்தையும் நான் விஜய்யிடம் கொடுத்துவிட்டேன் என்று சொல்கிறார். உடனே கடுப்பான சித்தப்பா நான் ஒன்னும் பணம் கேட்டு வரல, என் மகன் அஜய்க்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன். அதைத் சொல்லத்தான் வந்தேன் என்று சொல்கிறார்.
பசுபதி நல்லவன் இல்ல: இவ்வளவு சீக்கிரம் எதுக்கு அஜய்க்கு கல்யாணம் முதலில் அவன், விஜய் கூட ஆபிஸ் போகட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்ல, நான் உங்க கிட்ட ஐடியாவை கேட்கவில்லை முடிவு செய்துவிட்டேன் என்று சொல்கிறார். சரி பொண்ணு யாரு என்று தத்தா, கேட்க, பசுபதி பெண்ணு ராகினி தான் என்று சொல்கிறார். ராகினி என்றதும் டென்ஷனான காவேரி, என்னது ராகினியா அவ நல்ல பொண்ணு இல்ல, அதவிட பசுபதி எங்க அப்பாவை ஏமாத்தி நிலத்தை எழுதி வாங்கினார். அவர் சரியான பிராடு என்று சொல்கிறார். உடன விஜய்யின் சித்தப்பா, காவேரி உன் வேலைய பாரு, என் குடும்ப விஷயத்தில் நீ தலையிடாத என்கிறார்.
புது பிஸ்னசை தொடங்கிய சாரதா: இதையடுத்து, கங்கா, நர்மதாவிடம் வந்து அம்மா தான் என் மேல கோவமா இருக்காங்க, ஆனால், நீங்க ஏன் என்கூட பேசமாட்டீங்க என்று கேட்க, இல்ல அக்கா உன் கூட பேசவே பயமா இருக்கு என்கிறாள். அப்போது அங்கு வரும் சாரதா, அம்மா புது பிஸ்னஸ் செய்ய போகிறேன். கடைகடையாக அப்பளம் போட போறேன், என் பசங்கள நான் தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வியாபாரத்திற்கு கிளப்புகிறாள். இதைப்பார்த்து கங்கா கவலையோடு இருக்கிறாள்.
கல்யாணத்திற்கு ஓகே சொன்ன விஜய்: மறுபக்கம் விஜய் தனியாக அமர்ந்து இருக்க அப்போது வரும் காவேரி, என்னங்க அவர் ராகினியை இந்த வீட்டோட மருமகளாக்க பிளான் போடுறாரு, ராகின பசுபதி இரண்டு பேருமே நல்லவங்க இல்ல என்று சொல்கிறாள். இதைக்கேட்டு கொண்டிருந்த விஜய், கங்கா இந்த வீட்டை விட்டு வெளியில் போகும் போது நிவின் தனியாக இருக்கணும், அதுக்கு ராகினியை அஜய்க்கு திருமணம் செய்து வைப்பது சரி என முடிவு செய்து சித்தாப்பாவிடம் அஜய்யின் திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்.


Click it and Unblock the Notifications











