காவேரி வாழ்க்கைக்கு வந்த அடுத்த சிக்கல்.. அதிர்ச்சியில் சாரதா.. மகாநதி சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் மகாநதி தொடரும் ஒன்றாகும். திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், லக்ஷ்மி ப்ரியா,காவியா, சுஜாதா சிவகுமார், அதிதீ சௌந்தர்யா, ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், விஜய்யின் சித்தப்பா அஜய்க்கு திருமணம் செய்துவைக்க இருப்பதாக கூறினார். இதைக் கேட்ட விஜய், கங்கா இந்த வீட்டை விட்டு வெளியில் போகும் போது நிவின் தனியாக இருக்கணும், அதுக்கு ராகினியை அஜய்க்கு திருமணம் செய்து வைப்பது தான் சரி என முடிவு செய்து, திருமணத்திற்கு சம்மதம் என்கிறார்.

Vijay television mahanadhi serial April 12th full episode review in tamil

இதையடுத்து குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையால் டென்ஷனாக இருக்கும் யமுனா, நிவினுக்கு போன் போட்டு உங்களை பார்க்க வேண்டும் என்று சொல்ல, நிவின் ஓகே சொல்லி, அவளை ஓட்டலுக்கு அழைத்து செல்கிறான். அப்போது, யமுனா, நிவினிடம் தன் மனதில் இருந்த காதலை சொல்லி, என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா என்று கேட்க, அதிர்ச்சி அடைந்த நிவின், நீ படிக்கிற பொண்ணு நல்லாபடி, நான் உன் கூடவே தான் இருப்பேன் என்று சொல்லி அனுப்புகிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஆறுதல் சொன்னா தாத்தா: மகாநிதி இன்றை எபிசோடில், சாரதா வீட்டிற்கு வரும் தாத்தா, பணத்தை கங்கா கொடுத்த போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் கோபப்பட்டுவிட்டார்கள். அதனால் தான் வீட்டை காலி பண்ண சொன்னாங்க, நீங்க அத பற்றி கவலைப்பட வேண்டாம், நீங்க இங்கேயே இருங்க என்று சொல்ல, சாரதா ரொம்ப நல்லது எங்க, கங்கா பேசியதை மனதில் வைச்சுக்காதீங்க என்று சொல்கிறார்.

திருமண ஏற்பாடுகள்: இதையடுத்து மறுபக்கம் அஜய் தனது அப்பாவுடன் ராகிணி வீட்டுக்கு செல்கிறார். அப்போது ராகிணி அஜய்க்கு பிடித்த உணவை செய்து வைக்கிறார். அப்போது பசுபதி, வீட்டில் இருக்கும் அனைவருக்கும் திருமணத்தில் சம்மதமா என்று கேட்க, யாருக்கும் பிடிக்கலதான் ஆனால், அண்ணன் விஜய் ஓகே சொல்லிட்டான், இனிமேல் கல்யாண வேலையை பார்க்க வேண்டியது என்று அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

சாரதாவை மிரட்டிய பசுபதி: இதையடுத்து அஜய் வீட்டை பார்க்க வரும் பசுபதி, சாரதா இருக்கும் வீட்டுக்கு வருகிறாள். பசுபதி வீட்டிற்கு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியான சாரதா, இங்க என்ன வேலை எதுக்கு என் வீட்டுக்கு வந்தே என்று சத்தம் போட, நான் என் சம்மந்தி வீட்டுக்கு வந்தேன். என் மகள் ராகினியை விஜய்யின் தம்பி அஜய்க்கு கல்யாணம் பண்ணிவைக்க போறேன். கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு என் மகள் வந்ததும், அடுத்தடுத்து அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்கு, இனிமேல் உன் குடும்பத்தை நிம்மதியாகவே இருக்க விடமாட்டேன் என்று சவால் விடுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X