மனைவி முன் தலைகுனிந்து நின்ற குமரேசன்… மகாநதி இன்றைய எபிசோட்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் மகாநதி தொடரும் ஒன்றாகும். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், லக்ஷ்மி ப்ரியா, காவியா, சுஜாதா சிவகுமார், அதிதி சௌந்தர்யா, ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், ராகினி தனது தந்தையிடம், அஜய் தன்னை காதலிப்பதாக சொன்னதாகவும், அவரை தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் குண்டை தூக்கிப்போட டென்ஷனான பசுபதி, நீ நிவினை மறந்து திருமணம் செய்ய முடிவு எடுத்தது நல்ல விஷயம் தான், ஆனால், அஜய் வேண்டாம் நான் வேறு வரன் பார்க்கிறேன் என்று சொல்ல, ராகினி அஜய்யை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் தெளிவாக இருக்கிறாள்.

மகாநதி: இதையடுத்து இன்றைய எபிசோடில், காவேரி எப்படியாவது விஜய்யை மகிழ்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் என்று முயற்சி செய்து. தனது கையால் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் சப்பாத்தி, சிக்கன் என சமைத்துக் கொடுக்கிறாள். அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க விஜய்யிடம் எப்படி என் சமையல் என்று கேட்க விஜய் சூப்பர் என்று சொல்லி அவளை பாராட்டுகிறான். இதையடுத்து, என்னை மாதிரி குழந்தை வேண்டுமா இல்லை, உங்களை மாதிரி குழந்தை வேண்டுமா என்று அவரை வம்புக்கு இழுக்க விஜய் சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்புகிறான்
அல்வா மல்லிப்பூ: இதையடுத்து மறுபக்கம், கங்காவை சமாதானப்படுத்த குமரேசன் அல்வாவும் மல்லிப்பூவும் வாங்கிக் கொண்டு வருகிறான். இதைப்பார்த்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கிண்டலடிக்கிறார்கள். இதையடுத்து கங்கா எனக்கு அல்வா ரொம்ப பிடிக்கும் என்று சொல்லி, இருவரும் மனம் விட்டு பேசி இருவருக்கும் ஒருவழியாக சண்டை சமாதானமாகிறது.
இருவருக்கும் சண்டை: இதையடுத்து, மறுநாள் காலை குமரேசன் தெரியாமல் காவேரியின் மாமா மீது மோதிவிட இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. அப்போது, குமரேசன் என் மேல தான் தப்பு மன்னிச்சிடுங்க என்று சொல்லியும் கேட்காமல், மாமா உனக்கு கண்ணு தெரியாதா என்று கேட்டு குமரேசனை அவமானப்படுத்துகிறார். இதைப்பார்த்துக்கொண்டிருந்த கங்கா, காவேரி இருவரும் ஓடிவந்து என்ன ஆச்சு என்று கேட்க அவனுக்கு கண் தெரியாதா என்று கேட்க கங்கா கோபப்பட்டு மரியாதையாக பேசுங்க என்று சொல்கிறாள்.
உனக்கு எதற்கு மரியாதை: என்னது நான் மரியாதையா பேசனுமா, பெண்டாட்டிய தன் காசுல ஹானுமூனுக்கு கூட்டுட்டுபோக துப்பு இல்லாத இவனுன்கு நான் மரியாதை கொடுக்கனுமா என்று சொல்ல, காவேரி, கங்கா இருவரும் அதிர்ச்சி அடைந்து போக, தாத்தா இந்த டூருக்கு பணம் கொடுத்தாரு, எங்க காசுல ஊர் சுத்திட்டு உனக்கு மரியாதை ஒரு கேடா என்று கேட்க, கங்கா இவர் சொல்வது உண்மையா என்று குமரேசனை பார்த்து கேட்க, அவன் ஆமாம் என்பது போல தலையாட்ட கோபத்தில் அங்கிருந்து கங்கா கிளம்பி விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











