கோபத்தை கொட்டிய சாரதா.. கங்கா என்ன முடிவு எடுப்பாள்.. மகாநதி இன்றைய எபிசோட்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் மகாநதி தொடரும் ஒன்றாகும். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், லக்ஷ்மி ப்ரியா, காவியா, சுஜாதா சிவகுமார், அதிதி சௌந்தர்யா, ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், டூர் போனதற்கு குமரேசன் பணம் கொடுக்கவில்லை என்பதும், தாத்தா தான் பணம் கொடுத்து அனுப்பிவைத்தார் என்ற உண்மை கங்காவிற்கு தெரியவர அவள், குமரேசன் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறாள் இதையடுத்து, எப்படியோ பணத்தை ரெடி பண்ணி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போய் தாத்தாவிடம் கொடுத்து விடுகிறாள்.

இதையடுத்து, வீட்டிற்கு வரும் காவேரி, நீங்க பணம் கொடுத்தது எல்லாம், சரி தான் ஆனால், மாமா, அத்தை எல்லாம் இருக்கும் போது பணத்தை தூக்கி போட்டது தப்பு நீங்க அப்படி செய்து இருக்கக்கூடாது என்று சொல்ல, கடுப்பான கங்கா, இந்த வீட்டுமானம் போவது உனக்கு தெரியல, அந்த வீட்டு மானத்தை பத்தி நீ பேசுறியா என்று கேட்டு அவளிடம் சண்டை போட்டு, ஒரே வாரத்தில் இந்த வீட்டை காலி செய்கிறேன் என்று சவால் விடுகிறாள்.
இன்றைய எபிசோட்: இதையடுத்து இன்றைய எபிசோடில் கங்கா நர்மதாவிடம் காவேரியிடம் பேசக்கூடாது என்று சொல்லிக்கொண்டு இருக்க, இதைக்கேட்டு கடுப்பான சாரதா, அவளை பேசக்கூடாது என்று சொல்வதற்கு நீ யாரு, நீ எங்களுக்காக கஷ்டப்பட்டால், நான் உன் பேச்சை கேட்டு நடக்கனுமா, நீ யாருக்காவது மரியாதை கொடுக்குறியா, புருஷனுக்கு மரியாதை தருவது இல்லை, அம்மா, தங்கச்சினு யாரையும் மதிப்பது இல்லை.
கோபத்தை கொட்டி தீர்த்த சாரதா: எப்போ பார்த்தாலும் காவேரி கூட சண்டை, அவள் அப்படி கல்யாணம் செய்து கொண்டதால் எனக்கும் கஷ்டம் தான். அதற்காக அவ என் மகள் இல்லனு ஆய்டுவாளா... அவளும் இந்த குடும்பத்திற்காக கஷ்டப்பட்டுத்தான் இருக்கா, அதை நீ மறந்துவிடாதே என்று ஆத்திரத்தில் கத்துகிறாள் சாரதா. அப்போது, குறுக்கிட்ட கங்கா எல்லாம் இந்த குடும்பத்திற்காகத்தான் என்று சொல்ல, இதுக்கு மேல என் பசங்கள எனக்கு பார்த்துக்கொள்ள தெரியும், உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ, உன்னை நம்பி இந்த வீட்டை விட்டு நான் வர மாட்டேன், உனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை என்றால் தாராளமாக வீட்டை விட்டு போ என்று சொல்ல, காவேரி கண்ணீர் வடித்தபடி அங்கிருந்து செல்கிறாள். இதையடுத்து, இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











