ராகிணி எடுத்த அதிரடி முடிவு..மகாநதி சீரியலில் இன்றைய எபிசோட்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் மகாநதி தொடரும் ஒன்றாகும். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், லக்ஷ்மி ப்ரியா, காவியா, சுஜாதா சிவகுமார், அதிதி சௌந்தர்யா, ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், கங்காவின் கோபத்தால் கடுப்பான சாரதா, எப்போ பார்த்தாலும் காவேரி கூட சண்டை, அவள் அப்படி கல்யாணம் செய்து கொண்டதில், எனக்கும் கஷ்டம் தான். அதற்காக அவ என் மகள் இல்லனு ஆய்டுவாளா... அவளும் இந்த குடும்பத்திற்காக கஷ்டப்பட்டுத்தான் இருக்கா, அதை நீ மறந்துவிடாதே.

Vijay television mahanadhi serial April 9th full episode review in tamil

இதுக்கு மேல என் பசங்கள எனக்கு பார்த்துக்கொள்ள தெரியும், உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கோ, உன்னை நம்பி இந்த வீட்டை விட்டு நான் வர மாட்டேன், உனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை என்றால் தாராளமாக வீட்டை விட்டு போ என்று சொல்ல, காவேரி கண்ணீர் வடித்தபடி அங்கிருந்து செல்கிறாள். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகாநதி சீரியல் : இன்றைய எபிசோடில் காவேரி, மாடியில் இருந்து கொண்டு தனது தாய் வீட்டை பார்த்துக்கொண்டு இருக்க, அப்போது வரும் விஜய் என்ன ஆச்சு என்று கேட்க, கங்கா என் மீது கோவமா இருக்கா, எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்ல, அப்படியா, எனக்கு மனசு கஷ்டமா இருந்தா சரக்கு அடிப்பேன், நீயும் அடிக்கறியா என்று கேட்கிறாள். உடனே காவேரி ஏற்கனவே இந்த வீட்டில் எனக்கு நல்ல பேரு இதுல இதுவேறையா என்கிறாள்.

ராகிணிக்கு கல்யாணம்: மறுபக்கம் ராகிணியின் அப்பா பசுபதி, அஜய்யின் அப்பா ஓட்டலுக்கு அழைத்து, ராகிணிக்கு உங்க மகன் அஜய்யை ரொம்ப பிடித்து இருக்கு, எத்தனையோ மாப்பிள்ளை பார்த்தேன். வேண்டாம் வேண்டாம் என்று சொன்னவள் இன்று அஜய்யை திருமணம் செய்து கொள்ள ஒகே சொல்லி இருக்கா என்று சொல்ல, அஜய்யின் அப்பா எங்களுக்கு நிறைய சொத்து இருக்கு, என் பையன் வெளிநாட்டில் எம்பிஏ படித்து இருக்கான் என்று சொல்கிறார். இதையடுத்து வீட்டிற்கு வரும் பசுபதி, ராகினியிடம் அஜய் நல்ல பையனாகத்தான் இருக்கான், திருமணத்தில் எனக்கு சம்மதம் என்று சொல்கிறார்.

கடுப்பான கங்கா: வீட்டில் சாரதா, யமுனா, நர்மதா, பாட்டி ஆகியோருடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள் அப்போது, அந்த இடத்திற்கு கங்காவும் குமரேசனும் வர, நர்மதா உனக்கு என்ன வேணும்னாலும் அம்மாவை கேளு, வேற யார்கிட்டடையும் எதையும் கேட்காதே என்ற கங்காவை வெறுப்பேத்துவது போல ஜாடை மாடையாக பேசுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X