மல்லிகைப்பூ பாயாசம்… வேப்ப இலை பச்சடி.. விதவிதமான கல்யாண விருந்து.. நீயா நானா ஸ்பெஷல்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா நிகழ்ச்சியை சொல்லலாம். பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பேசப்படும் தலைப்புகள் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். அந்த வகையில இந்த வாரம் ஒரு சுவாரசியமான தலைப்புடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளது.
இந்த வார நிகழ்ச்சியில் கல்யாண விருந்தை ஆதரிப்பவர்கள் மற்றும் கல்யாண விருந்தை எதிர்ப்பவர்கள் என இரண்டு விதமான தலைப்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் கோபிநாத். இதில், கல்யாண விருந்து ஆதரவாளர் தரப்பில் இருந்து பேசிய ஒருவர், அண்மையில் என்னுடைய மகளுக்கு திருமணம் நடந்து அந்த திருமணத்தில் 43 வகையான உணவு வகைகளை பரிமாறினேன். அதில் எனக்கு மிகவும் பிடித்த உணவு ஆக்ரா பான், காசி அல்வா. இந்த காசி அல்வா செய்வதற்காக திருநெல்வேலியில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு செய்யப்பட்டது. ஏனென்றால் அந்த தண்ணீரில் அல்வா செய்தால் தான் அல்வாவின் சுவை கூடுதலாக இருக்கும் என்பதற்காக அங்கிருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு அல்வா செய்யப்பட்டது என்றார்.

வைச இறால் குழப்பு: அதைத் தொடர்ந்து பேசிய மற்றொரு பெண், எங்களுடைய திருமணத்தில் 103 வகையான உணவு பரிமாறப்பட்டது. அதில், திருவேணி ஜூஸ், சைவ இறால் குழம்பு, சைவ மீன் குழம்பு, சைவ கறி குழம்பு பரிமாறப்பட்டது. திருமணத்தில் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் பிடித்ததை சாப்பிட வேண்டும் என்பதற்காக வகை வகையான விருந்து வைத்தோம் என்றார்.
இளநீர் இட்லி: இதைத்தொடர்ந்து கல்யாண விருந்தை எதிர்ப்பாளர் தரப்பில் இருந்து பேசிய ஒருவர், சிலரின் திருமணத்தில் கொட்டாங்குச்சி இட்லி பரிமாறப்பட்டது அதை பார்க்கும் போதே அபத்தமாக இருந்தது. மேலும் 500 வகையான இட்லி என்று சொல்லி விட்டு கேரட் இட்லி, கப் இட்லி, தட்டு இட்லி என்ன சொல்லிக் கொண்டே போகிறார்கள். இதில் இளநீர் இட்லியை ஏற்றுக் கொள்ளவே முடியாது? இளநீரில் எப்படி இட்லி வரும் என்று கேட்டார். அதற்கு இந்த இட்லி மாவில் இளநீரை சேர்ப்பதால் இட்லி பூ போல இருக்கும் என்று சொல்ல, இரு தரப்புக்கும் இடையே பெரும் வாக்குவாதமே நடைபெற்றது.
மல்லிப்பூ பாயாசம்: வகை வகையான உணவை கேட்டு மிரண்டு போன கோபிநாத், கல்யாண விருந்து எதிர்ப்பாளர்களை அழைத்து விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டு அதை ருசித்து பார்க்கும்படி கூறினார். அந்த விருந்தில் மல்லிகை பூ பாயாசம், வேப்ப இலை பச்சடி, மாதுளை கூட்டு, வாழை இலை பொரியல் என வகை வகையான உணவு இருந்தது அந்த உணவு வகைகள் அனைத்தையும் ருசித்துப் பார்த்துவிட்டு சிறப்பாக இருந்ததாக கூறினார்கள். மக்கள் அனைவரும் புதுசா எதாவது வேண்டும் என, விதவிதமான உணவு வகைகளை சாப்பிட விரும்புவதால், இது போன்ற உணவு வகைகள் தயாரிக்கப்படுவதாக அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். எது எப்படியோ... இன்றைய எபிசோடை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது அதுவும் பசி நேரத்தில் இந்த மல்லிகை பூ பாயாசத்தை ருசி பார்க்க மனம் ஏங்கியது என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications











