எதே தண்ணியை மிச்சப்படுத்தலாமா?.. விஜய் டிவி சீரியலில் இடம்பெற்ற ஷவர் சீன்.. கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!

சென்னை: இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் பழைய படம் போல பூவும் பூவும் கிஸ் பண்ற சீனையெல்லாம் சீரியலில் வைப்பார்கள் என்கிற அளவுக்கு அங்கேயும் கவர்ச்சியான காட்சிகள் தேவைப்படத்தான் செய்கின்றன. ஓடிடியில் எல்லை மீறி போனாலும், சீரியல்களை இன்னமும் குடும்பத்துடன் பார்க்க காரணமே தூங்கும் போதும் முழு சேலையை அணிந்துக்கொண்டு நடிகைகள் குடும்பப் பாங்காக நடிப்பது தான் காரணம் என்கின்றனர்.

ஆனால், சமீப காலமாக ஃபர்ஸ்ட் நைட் சீன் முதல் முத்தக் காட்சிகள் வரை இடம்பெற்று இளைஞர்களை வசீகரிக்க சீரியல்களும் இறங்கி வேலை பார்த்து வருகின்றன. இந்நிலையில், விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலில் கணவனும் மனைவியும் ஒன்றாக ஷவரில் குளிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

Vijay Tv Aaha Kalyanam Shower bath scene gets trolled

சமூக வலைதளத்தில் விஜய் டிவி வெளியிட்ட புரமோவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து ஏகப்பட்ட ட்ரோல்களையும் கமெண்ட்டுகளையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

ஆஹா கல்யாணம்: சினிமா படங்களின் பெயர்களைத்தான் சீரியலுக்கு வைக்க வேண்டும் என ஒரு குறிக்கோளுடன் பலரும் பல நல்ல படங்களின் பெயர்களை தங்கள் சீரியல்களுக்கு வைத்து வருகின்றனர். நானி நடிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அக்‌ஷயா கண்டமுதன், விக்ரம் ஸ்ரீ, மெளனிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். "ஐஸ்வர்யாவின் கர்ப்பம் பொய் என வெளிப்படுமா?" என்பது தான் தற்போது அந்த சீரியலின் ஹாட் டாப்பிக்காக சென்றுக் கொண்டிருக்கிறது.

ஷவர் குளியல்: அதை பார்த்தால் பாத்ரூமா அல்லது கிட்சனில் செட் போட்டுள்ளார்களா? என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு அவ்வளவு பெரிய பாத்ரூமில் கணவரை அழைத்துக் கொண்டு ஷவரில் குளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. பாத்ரூமுக்கு கணவரை அழைத்து வரும் நடிகையிடம் இங்கே என்ன பண்ற? இங்க என்ன இருக்கு? என்றெல்லாம் கேட்பதே காமெடியாக உள்ள நிலையில், இங்க பாருடா.. இங்க ஷவர் இருக்கு.. இதுல சேர்ந்து குளிச்சா தண்ணியை மிச்சம் படுத்தலாம் என சொல்லியபடியே ஷவரில் இருவரும் குளிக்கும் காட்சியை வைத்துள்ளனர்.

பட்டுப்புடவை பாவம்: உலகத்திலேயே இப்படி பட்டுப்புடவை கட்டிக்கிட்டு பாத்ரூமில் ஷவரில் குளிக்க இந்த சீரியல் நடிகர்களால் தான் முடியும் என்றும் பாவம் அந்த பட்டுப்புடவை என கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஷவருக்கு அடுத்து என்ன?: விஜய் டிவியா? அல்லது உல்லு வெப்சீரிஸா? என்கிற அளவுக்கு மோசமான கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஷவரில் குளிக்கும் சீன் எல்லாம் வைக்கிறீங்க அடுத்து என்ன? என கேள்வி எழுப்பி இந்த கன்றாவி சீனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

டைரக்டர் புதுசா ட்ரை பண்றாரு: ஆஹா கல்யாணம் சீரியலின் டைரக்டர் ஏதோ புதுசா ட்ரை பண்றாரு என்றும் இதற்கு விஜய் டிவியே "என்னடா நடக்குது இங்க" என கேப்ஷன் போட்டு புரமோ வேறு வெளியிடுகின்றனர் என பங்கம் பண்ணி வருகின்றனர். இன்னும் பல சீரியல்களில் இதைவிட மோசமான பிட்டு சீன்கள் எல்லாம் அரங்கேற ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாங்களும் டெவலப் ஆக வேண்டாமா? என சீரியல் இயக்குநர்களும் இதுபோன்ற சீனையெல்லாம் வைக்கத் தொடங்கி விட்டனர் போலத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X