பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனா கேமராவையெல்லாம் அடிச்சி உடைச்சிடுவேன்.. மாகாபா இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஆங்கரான மாகாபா ஆனந்த் தொடர்ந்து பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது கலகலப்பான மற்றும் காமெடி கலந்த பேச்சு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பை சேர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் மாகாபா ஆனந்த்.
பல படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு மாகாபா பதிலளித்துள்ளார். இது மட்டுமில்லாமல் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியின் ஆங்கரிங் குறித்தும் அவர் பேசியுள்ளார். தொடர்ந்து மணிமேகலை -பிரியங்கா விவகாரம் குறித்தும் பேசியுள்ளார் மாகாபா ஆனந்த்.

ஆங்கர் மாகாபா ஆனந்த்: ஆங்கர் மாகாபா ஆனந்த்: விஜய் டிவியின் ஆங்கராக பல ஆண்டுகளாக ரசிகர்களை பல நிகழ்ச்சிகளின்மூலம் கவர்ந்து வருபவர் மாகாபா ஆனந்த். இவருடைய காமெடி இழையோடும் பேச்சிற்கு அடிமையாகாத ரசிகர்களே கிடையாது என்று கூறும் வகையில் இவர் அடுத்தடுத்த ஷோக்களின்மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இது மட்டுமில்லாமல் பல இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிலும் இவரை பார்க்க முடியும். அந்த வகையில் விஜய் டிவியின் முன்னணி ஆங்கரான மாகாபா ஆனந்த், தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கடந்த சில சீசன்களாக கூறப்பட்டு வருகிறது,
மாகாபா ஆனந்த் உறுதி: இதேபோல தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் மாகாபா ஆனந்த் இணைய உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள மாகாபா ஆனந்த், பல ஆண்டுகளாக இது குறித்து கூறப்பட்டு வருவதாகவும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். தான் பிக்பாஸ் செட் இருக்கும் வழியாக வேண்டுமானால் போவேன் என்று தனக்கேயுரிய காமெடியை வெளிப்படுத்தியுள்ளார். தான் ஏற்கனவே அரை மெண்டல் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் மெண்டலாகிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கேமராக்களை அடித்து உடைத்து விடுவேன்: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் அங்கிருக்கும் கேமராக்களை எல்லாம் தான் அடித்து உடைத்துவிடுவேன் என்றும் மாகாபா ஆனந்த் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஒரு எல்லையிலும் விஜய் சேதுபதி ஒரு எல்லையிலும் செயல்பட்டு வரும் நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்துவார் என்று பார்க்க ஆவலாக உள்ளதாகவும் கண்டிப்பாக நன்றாக நடத்துவார் என்றும் மாகாபா தெரிவித்துள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் பிரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஆங்கர்: இந்த நிகழ்ச்சியில் கடந்த 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போதைய சீசனில் விஜய் சேதுபதி ஆங்கராக இணைந்துள்ளார். கமல்ஹாசனையே தொகுப்பாளராக பார்த்துவந்த ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி எப்படிப்பட்ட தாக்கத்தை இந்த ஷோ மூலம் கொடுப்பார் என்பதை தெரிந்துக் கொள்ள அனைவரும் வெயிட்டிங். தன்னுடைய அழகான பேச்சால் ரசிகர்களை படங்களிலும் வெளியுலகத்திலும் கவர்ந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரது தொகுப்பு இந்த ஷோவிற்கு எப்படிப்பட்ட அட்ராக்ஷனை ஏற்படுத்தும் என்பதை அடுத்த மாதத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











