பிரியங்கா நம்மை வேலையே செய்ய விடமாட்டாங்க.. மணிமேகலையை தொடர்ந்து அதே கருத்தை பேசிய மாகாபா ஆனந்த்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா. இதே போல மாகாபா ஆனந்தும் விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவருமே படங்களின் இசை வெளியீடு உள்ளிட்டவற்றிலும் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாகாபா ஆனந்த், பிரியங்கா ஒரு நிகழ்ச்சியில் இருக்கிறார் என்றால் நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சும்மா போய் நின்று விட்டுகூட காசை வாங்கிக் கொண்டு வந்து விடலாம் என்று கூறியுள்ளார். முன்னதாக தன்னை ஆங்கராக செயல்பட விடாமல் பிரியங்கா தன்னுடைய வேலையில் குறுக்கிடுவதாக மணிமேகலை கூறியிருந்தார். ஆனால் அதையே மாகாபா தற்போது பாசிட்டிவாக மாற்றி பேசியுள்ளார்.

ஆங்கர் பிரியங்கா: விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக தொடர்ந்து பல வருடங்களாக செயல்பட்டு வருபவர் பிரியங்கா. இவர் ஆங்கராக மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 5வது சீசனிலும் குக்காக பங்கேற்று டைட்டிலையும் வெற்றிக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்ட மணிமேகலை -பிரியங்கா இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக மணிமேகலை இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதையும் பார்க்க முடிந்தது. இந்த சம்பவத்தில் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களும் ரசிகர்களும் அடுத்தடுத்து கருத்துக்களை பதிவு செய்தனர்.
ஆங்கர் மாகாபா ஆனந்த்: துவக்கத்தில் மணிமேகலைக்கு ஆதரவாக, பிரியங்காவிற்கு எதிரான பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக காணப்பட்டன. ஒரு கட்டத்தில் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகின. விஜய் டிவி பிரபலங்களும் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசினர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா குறித்து பேசிய மாகாபா ஆனந்த், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரியங்கா அந்த நிகழ்ச்சியில் இருந்தால் நமக்கு வேலை அதிகமாக இருக்காது, நிம்மதியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். பிரியங்கா அந்த நிகழ்ச்சியில் இறங்கி வேலை செய்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சும்மா நின்று பணத்தை வாங்கலாம்: துவக்கத்தில் இருந்து அந்த நிகழ்ச்சியை ஒரு கட்டத்திற்கு சரியாக கொண்டு வந்து பிரியங்கா நிறுத்துவார் என்றும் அதன் பிறகு நாம் பேசினால் கூட போதும் என்று மாகாபா கூறியுள்ளார். பிரியங்காவுடன் நாம் ஒரு நிகழ்ச்சியை மேற்கொண்டால் அதில் சும்மா நின்று விட்டுக் கூட பணத்தை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம் என்றும் தொழிலில் மிகவும் ஆர்வமாக பிரியங்கா செயல்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு பிரியங்காவிற்கு கம்யூனிகேஷன் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக மாகாபா தெரிவித்துள்ளார்.. இது பிரியங்காவிற்கு கடவுள் கொடுத்த விஷயம் என்றும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மணிமேகலை குற்றச்சாட்டு: மேலும் பிரியங்கா அவரது குடும்பத்தின் பிரெட் வின்னர் மற்றும் குடும்பத் தலைவி என பலவாறாக பாராட்டியுள்ளார் மாகாபா. முன்னதாக மணிமேகலை -பிரியங்கா விவகாரத்தில் மாகாபா துவக்கத்தில் கருத்து சொல்ல மறுத்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செருப்பு உள்ளிடவற்றை பதிவிட்டு அமானுஷ்யம் என்றெல்லாம் கருத்து தெரிவித்தது குறிப்பிடப்பட்டது. இதனிடையே மணிமேகலை போலவே பிரியங்கா யாரையும் வேலை செய்ய விடமாட்டார் என்ற மணிமேகலையின் கருத்தையே பாசிட்டிவ்வாக தற்போது மாகாபா பேசியுள்ளார். இதை இப்படியும் சொல்லலாமா என்று தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











