Priyanka Deshpande: பிறந்த நாள் அதுவுமா பிரியங்கா தேஷ்பாண்டே சொன்ன குட் நியூஸ்.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை: தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தேஸ்பாண்டே இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரியங்கா தேஷ்பாண்டே மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

பிரியங்கா தேஷ்பாண்டே: விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக விளங்கும் பிரியங்கா, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் போன்ற பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். தனது கலகலப்பான பேச்சு மற்றும் இயல்பான நகைச்சுவையால் அனைவராலும் விரும்பப்படும் தொகுப்பாளராக இருக்கிறார். பிரியங்கா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த நிலையில், கடந்த ஆண்டு தொழிலதிபர் வாசியை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

Vijay Tv Priyanka Deshpande Birthday
Photo Credit:

ரசிகர்களுக்கு குட் நியூஸ் : இந்நிலையில், தனது 34வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இதுவரை தொகுப்பாளினியாக மட்டுமே இருந்த பிரியங்கா தேஷ்பாண்டே, தற்போது பாடகியாக மாறி இருக்கிறார். தனது முதல் பாடலை தனது YouTube சேனலில் வெளியிட்டுள்ள அவர், இந்தப் பாடலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்ததாகவும், தனது 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். "வயசாகுதே" எனும் இந்தப் பாடலுக்கு V2 Vijay Vicky இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை விக்னேஷ் கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்தப் பாடலை பிரியங்கா தேஷ்பாண்டே தனது குரலில் இனிமையாக பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. பாடகியாக புதிய பயணம் தொடங்கியுள்ள பிரியங்காவுக்கு இணையத்தில் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X