பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட வீடியோ.. கணவரை என்ன செய்திருக்காருனு பாருங்க!
சென்னை: தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே அண்மையில் தனது 34வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முக்கியமான தருணங்களை தொகுத்து, வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
பிரியங்கா தேஷ்பாண்டே: பிரபல சின்னத்திரைதொகுப்பாளினியாக பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2025 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் வாசி சச்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இலங்கை வாழ் தமிழரான வாசி இலங்கையில் இருப்பதால், திருமணத்திற்கு பிறகு பிரியங்கா, இலங்கை, சென்னை மாறி வந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். வாசி சச்சி இலங்கையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வருகிறார். இலங்கையில் கலை நிகழ்ச்சிக்காக பிரியங்காவை அழைத்த போது தான் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது.

வாழ்த்தும் ஃபேன்ஸ்: இந்நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாகிராமில், தனது பிறந்த நாள் கொண்டாட்ட தருணத்தில் நிகழ்ந்த முக்கியமான தருணத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது கணவருடன் ஆட்டம் போட்டது, அவரை கொஞ்சியது, பிறந்த நாளை கொண்டாடியது என பல பதிவுகள் இடம் பெற்றுள்ளன. இதைப்பார்த்த பேன்ஸ் இன்று போல என்றும் இருக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர்.
பாடகியான பிரியங்கா: இத்தனை நாட்கள் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா தேஷ்பாண்டே, தற்போது பாடகியாக மாறி இருக்கிறார். சொந்த குரலில் பாடிய முதல் பாடலை தனது YouTube சேனலில் பிறந்த நாளில் வெளியிட்டார். இந்தப் பாடலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்ததாகவும், தனது 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். இணையத்தில் வெளியான "வயசாகுதே" என்ற பாடல் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த பாடலுக்கு V2 Vijay Vicky இசையமைக்க, பாடல் வரியை விக்னேஷ் கிருஷ்ணன் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications