இங்க என்ன நடக்குது.. விடுமுறைக் கொண்டாட்டத்திற்கு பறந்த பிரியங்கா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் ஆங்கர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டிலிருந்து துவங்கி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், நிகழ்ச்சியின் துவக்கம் முதலே கோமாளியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவந்தார் மணிமேகலை.

கடந்த 4 சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்தார் மணிமேகலை. இந்நிலையில் இந்த சீசனில் அவர் நிகழ்ச்சியின் ஆங்கராக களமிறங்கியுள்ளார். இதனிடையே நிகழ்ச்சியில் குக்காக உள்ள மற்றொரு ஆங்கரால் தனக்கு மிகப்பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் சுயமரியாதை முக்கியம் என்றும் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

priyanka manimegalai

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டிலிருந்து நடந்து வரும்நிலையில், 4 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 5வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே புகழ், மணிமேகலை ஆகியோர் கோமாளிகளாக இருந்து வருகின்றனர். இவர்களின் சேட்டைகள் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக காணப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஸ்ட்ரெஸ் பஸ்டராக அமைந்து வருவதாக ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். கடந்த 4 சீசன்களாக கோமாளியாக இருந்த மணிமேகலை, இந்த சீசனில் ஆங்கராக மாறியிருந்தார்.

விலகிய மணிமேகலை: தர்ஷனுடன் இணைந்து மணிமேகலை இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக செயல்பட்டு வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் குக்காக இருக்கும் மற்றொரு ஆங்கரால் தனக்கு மிகப்பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் காசு, புகழ் உள்ளிட்ட அனைத்தையும் விட சுயமரியாதை முக்கியம் என்றும் தெரிவித்துள்ள மணிமேகலை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குக்காக மட்டுமில்லாமல் தன்னுடைய ஆங்கரிங்கில் அதிகமான தலையீடு உள்ளதாகவும் மணிமேகலை தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் ஆதரவு: மணிமேகலையின் இந்த முடிவால் புகழ், குரேஷி உள்ளிட்ட நிகழ்ச்சியின் கோமாளிகளும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மணிமேகலைக்கு ஆதரவாக அவர்கள் பேசியதை பார்க்க முடிந்தது. கடந்த எபிசோடில் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைதான் தற்போது வெடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் துவக்கம் முதலே இருந்துவரும் மணிமேகலைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் பிரியங்காவை வறுத்து வருகின்றனர். அவர் இந்த விஷயத்தில் என்ன மாதிரியான விளக்கம் கொடுப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சுற்றுலா கொண்டாட்டத்தில் பிரியங்கா: ஆனால் இதை குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் சுற்றுலா கொண்டாட்டத்திற்காக தற்போது பிரியங்கா வெளிநாடு பறந்துள்ளார். விமானத்தில் இருக்கும்படியான புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு, வெளிநாட்டுக்கு போயிருக்காங்களே என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் மணிமேகலைக்கு ஆதரவு பெருகி வருகிறது. தொடர்ந்து அவர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X