குக் வித் கோமாளி சர்ச்சை.. வெளிநாடு சென்றுவந்த ஆங்கர் பிரியங்கா வெளியிட்ட முதல் பதிவு!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக நான்கு சீசன்களை நிறைவு செய்த நிலையில் இன்றைய தினம் 5வது சீசனையும் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியின் மூலம் நிறைவு செய்ய உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி, ராதா உள்ளிட்டவர்களும் பங்கேற்க உள்ளதாக முன்னதாக வெளியான ப்ரோமோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்சியின் இறுதிப்போட்டி தொடர்ந்து 5 மணி நேரம் நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பான கலை நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் உள்ளிட்டவர்கள் குறித்து முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியில் அது தெரியவரும்.

television priyanka

குக் வித் கோமாளி நிகழ்ச்சி: குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி இன்றைய தினம் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நிறைவடைய உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் துவங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த நான்கு சீசனங்களாக சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்ற பாராட்டையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த 5வது சீசனில் இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த சர்ச்சைகளை சந்தித்து வந்தது. மோசமான பேச்சுக்களை ஆபாசமான சம்பவங்களை இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்து அரங்கேற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மணிமேகலை விலகல் முடிவு: இதனிடையே, நிகழ்ச்சியில் குக்காக செயல்படும் ஆங்கர் ஒருவர் தன்னை சிறப்பாக செயல்படவில்லை என்றும் தன் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டி நிகழ்ச்சியின் ஆங்கர் மணிமேகலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். கடந்த 4 சீசன்களாக கோமாளியாக செயல்பட்ட இவர் இந்த சீசனில் ரக்ஷனுடன் இணைந்து ஆங்கராக செயல்பட்டார். இந்லையில் நிகழ்ச்சியிலிருந்து இவர் விலகியது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு காரணமான பிரியங்காவை சமூக வலைதளங்களில் பலரும் வறுத்தெடுத்து விட்டனர். அடுத்தடுத்து பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் ஆதரவு தெரிவித்து பலரும் கருத்துக்களை பகிர்ந்தனர்.

வெளிநாடு சென்ற பிரியங்கா: பிரியங்கா மீது குற்றமே இருக்கும் பட்சத்திலும் அவரது சொந்த வாழ்க்கையை கேவலப்படுத்த கூடாது என்று பலரும் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்தனர். இதனிடையே பிரியங்காவிற்கு ஆதரவாக குரேஷி உள்ளிட்டவர்கள் வீடியோ வெளியிட்ட நிலையில், அவர்களுடைய கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்களை சொம்புகள் என்று மணிமேகலை கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை முடிக்கவே மாட்டார்களா என்று பலரும் கேட்கும் நிலைக்கு இந்த விவகாரம் அடுத்தடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்று விட்டார்.

பிரியங்கா பதிவு: இதனிடையே தற்போது மீண்டும் சென்னை வந்துள்ள அவர், இன்றைய தினம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை வந்துள்ள அவர், குக் வித் கோமாளி சர்ச்சைக்கு பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய வீடியோ ஒன்றை ரீ-ஷேர் செய்துள்ளார். தனது 30வது பிறந்தநாளையொட்டி முன்னதாக அவர் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். கடற்கரையில் உல்லாசமாக ஆடி ஓடும் அவரது இந்த வீடியோ தற்போதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X