Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
என்னோட உலகமே இவங்கதான்.. போட்டோ வெளியிட்டு உற்சாகம் தெரிவித்த பிரியங்கா!
சென்னை :விஜய் டிவியின் பிரபல ஆங்கர் பிரியங்கா அந்த சேனலின் முன்னணியில் உள்ளார்.
இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தன்னுடைய கலகலப்பான தொகுப்பால் ரசிகர்களை இவர் கவர்ந்து வருகிறார்.
தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துக் கொண்டு அனைவரையும் கவர்ந்தார்.
லண்டனிலேயே செட்டில் ஆக போறீங்களா?...பிரியங்கா செயலால் குழம்பிய ரசிகர்கள்

விஜய் டிவி
விஜய் டிவியின் ஆங்கர்கள் எப்போதுமே மிகவும் கலகலப்பாக செயல்படுவார்கள். இந்த சேனலில் ஆங்கரிங் செய்து அதன்மூலம் சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றவர்கள் அதிகமாக இருக்கின்றனர். குறிப்பாக சந்தானம், சிவகார்த்திகேயன், டிடி உள்ளிட்டவர்கள் இவ்வாறு சினிமாவில் பிரபலமாக காணப்படுகின்றனர்.

தொகுப்பாளர் பிரியங்கா
விஜய் டிவியின் ஆங்கரிங்கில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருபவர் பிரியங்கா. இவரின் சிறப்பான தொகுப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகியுள்ளனர். இதன்மூலம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலமும் அதில் இவரின் செயல்பாடு காரணமாகவும் இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

காதல் திருமணம்
இதனிடையே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியபோது அந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016ல் கல்யாணம் செய்துக் கொண்டார். இதையடுத்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

கணவரை பிரிந்தாரா பிரியங்கா?
இதனிடையே தன்னுடைய கணவர் குறித்து மூச்சு விடாமல் தொடர்ந்து தன்னுடைய ஆங்கரிங்கில் பிசியாக காணப்படுகிறார் பிரியங்கா. கடந்த சில வருடங்களாக இது தொடர்கதையாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பிரீஸ் டாஸ்கில் கூட கணவர் குறித்து இவர் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார்.

மவுனம் சாதிக்கும் பிரியங்கா
இந்நிலையில் பிரவீனை பிரியங்கா விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து வாய்திறக்காமல் மவுனம் சாதித்துவருகிறார் பிரியங்கா. தற்போது தன்னுடைய அம்மா மற்றும் தம்பியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா, அவர்கள்தான் தன்னுடைய உலகம் என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கேள்வி
இதனால் அவருடைய கணவர் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இருவருக்குள்ளும் என்னதான் பிரச்சினை என்றும் கேட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்தெல்லாம் கவலைக் கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய வேலைதான் தனக்கு முக்கியம் என்பது போல அவர் பிசியாக காணப்படுகிறார்.