பிரவீண் கரம் பிடித்த பிரியங்கா தேஷ் பாண்டே
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இனி சிங்கிள் இல்லை... இன்று முதல் இல்லத்தரசியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் பிரியங்கா. தன்னுடன் பணிபுரிந்த பிரவீணை பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளினி, கலக்கப் போவது யாரு நடுவர் என்று பன்முகம் காட்டி வரும் ப்ரியங்கா தேஷ்பாண்டே பெங்களூரு பொண்ணு. ஆனால் படிச்சது சென்னையில், ஆங்கிலம், கன்னடம், இந்தி, என பல மொழிகள் அத்துப்படி.
எத்திராஜ் கல்லூரியில் படித்து விட்டு ஜீ தமிழ் சேனல், சன்டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். இப்போது விஜய் டி.வியில் பிரபல தொகுப்பாளினியாக உயர்ந்துள்ளார்.
வாயாடி தொகுப்பாளினி என்று பெயரெடுத்த பிரியங்கா, தன்னுடைய காதலர் பிரவீணை இன்று கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு நேரில் சென்ற மா.கா.பா ஆனந்த், மணமக்களை வாழ்த்தியதோடு அவர்களுடன் செல்பி எடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











