Priyanka: விஜய் டிவி பிரியங்காவுக்கு கல்யாணம் முடுஞ்சுது.. அவசரத் திருமணமா.. வீடியோவே இருக்கே!
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் விஜய் டிவியில் மிகவும் முக்கியமான ஆங்கராக மாறியுள்ளார். விஜய் டிவி மட்டும் இல்லாமல், பல திரைப்படங்களின் புரோமோஷன்கள், பல யூடியூப் சேனல்களுக்காக பிரபலங்களை பேட்டி எடுப்பது, பல நிறுவனங்களின் சினிமா விருது நிகழ்ச்சிகள் என பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் இன்று அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் உலா வருகிறது. மேலும் வீடியோவும் உலா வருகிறது.

பிரியங்கா திருமணம் செய்து கொண்டவர் பெயர் வசி என கூறப்படுகிறது. தனது திருமணம் குறித்து பிரியங்கா தனது சமூக வலைதளப் பக்கங்களில் எந்த தகவலும் வெளியிடவில்லை. தனது திருமணம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை விரைவில் சமூக வலைதளங்களில் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு திருமணம் ஆன தகவல் தெரிந்ததும் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் திருமணம் குறித்து நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமே கூறப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால்தான் இது குறித்து முன்னரே வெளியில் யாருக்கும் தகவல்கள் கூறப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பிரியங்காவின் கழுத்தில் வசி தாலி கட்டி முடித்த பின்னர், பிரியங்கா மிகவும் எமோஷ்னலாக வசியைப் பார்த்தார். உடனே, வசி பிரியங்காவின் நெற்றியில் முத்தம் வைத்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த திருமண வீடியோவில் பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் ஆகியோர் உள்ளனர்.
பிரியங்கா தேஷ் பாண்டேவுக்கு இது இரண்டாவது திருமணம். இவர் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் 6 ஆண்டு கால இல்லற வாழ்க்கைக்குப் பின்னர் விவாகரத்து செய்து கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது இருவரும் பிரிந்து உள்ள நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தனது முதல் கணவர் பிரவீன் குமாரை வெகு சில சமயங்களில் மட்டுமே அவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பிரிந்தது, பிரியங்காவின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இவர்கள் பிரிந்து சுமார் மூன்று ஆண்டு கால இடைவெளியில் பிரியங்கா தனது திருமண வாழ்க்கையைத் தொடங்கியுள்ளதால், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர் சீரியல் தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. இவர்களது திருமணம் குறித்து முன்னறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள்.
பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதால் அவரது தாயார் மற்றும் சகோதர் செம மகிழ்ச்சியில் உள்ளார்கள். திருமணம் முடிந்ததும் மண மேடையில் பிரியங்கா கண் கலங்கியதும் அவரது கணவர் வசி அவருக்கு நெற்றியில் முத்தமிட்டு அன்பைப் பரிமாறியது அனைவரையும் நெகிழ்ச்சில் ஆழ்த்தியது. தற்போது இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











