வயிறு குலுங்க சிரிக்க தயாரா மக்களே.. விரைவில் கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் 4 நிகழ்ச்சி!
சென்னை : விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி அந்த சேனலின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது.
சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், அருண் ராஜா காமராஜ் போன்றவர்களுக்கு சினிமாவில் சிறந்த அறிமுகத்தை இந்த நிகழ்ச்சி கொடுத்துள்ளது.
தற்போது கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் குறித்த அறிவிப்பை விஜய் டிவி மேற்கொண்டுள்ளது.

கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் ஷோ
விஜய் டிவியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வித்தியாசமான வகையில் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சேனலின் முக்கியமான நிகழ்ச்சிகளாக பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் துவங்கி தற்போது 8 சீசன்களை கலக்க போவது யாரு நிகழ்ச்சி கடந்துள்ளது.

வெற்றி நாயகர்களின் ஷோ
கலக்க போவது யாரு நிகழ்ச்சி சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ் போன்றவர்களுக்கு சிறப்பான புகழ் வெளிச்சத்தை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் வெள்ளித் திறையிலும் வெற்றிகரமாக உலா வந்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் ரோபோ சங்கர் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

சிவகார்த்திகேயனை உருவாக்கிய நிகழ்ச்சி
சிவகார்த்திகேயன் 3 படத்தில் காமெடியனாகவே அறிமுகமாகி, தொடர்ந்து ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளார். இந்நிலையில் கலக்கப் போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சி தனது 4வது சீசனை விரைவில் துவங்கவுள்ளது. இதுகுறித்த ப்ரமோவை விஜய் டிவி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் 4 நிகழ்ச்சி
இந்த ப்ரமோவில் தாடி பாலாஜி உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். இதுகுறித்த கேப்ஷனில் வயிறு குலுங்க சிரிக்க தயாராகுங்கள் என்றும் விரைவில் கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இந்த நிகழ்ச்சி தற்போது விரைவில் ஒளிபரப்பாக உள்ளது ரசிகர்களுக்கு இனிப்பான செய்திதான்.

கலக்கப் போவது யாரு சாம்பியன் புகழ்
இந்த நிகழ்ச்சியின்மூலம் கவனம் பெற்று குக் வித் கோமாளி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் புகழ். இந்த நிகழ்ச்சியின்மூலம் சிறப்பு கவனம் பெற்ற மறைந்த வடிவேலு பாலாஜிக்கு, தனது திருமணத்தின்போது புகழ், அஞ்சலி செலுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











