விஜய் டிவியிலிருந்து விலகிய அறந்தாங்கி நிஷா... ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தேன் நிஷா வேதனை!
சென்னை: தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் மணிமேகலை பஞ்சாயத்தே இன்னும் ஓயாத நிலையில், விஜய் டிவியில் இருந்து அறந்தாங்கி நிஷா விலகி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனால், இணையவாசிகள் புலம்பி வருகின்றனர்.
விஜய் டிவியின் முன்னணி பிரபலங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அறந்தாங்கி நிஷா. பொதுவாக நகைச்சுவையில் பெண்களால் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தை உடைத்த பெருமைக்குரியவராக இவரை பார்க்கலாம். கருப்பு,குண்டு என தனக்கு இருக்கு மைனஸ்கள் அனைத்தையும் பிளஸாக மாற்றி அனைவரையும் சிரிக்க வைத்து அழகுப்பார்த்த நிஷாவிற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அறந்தாங்கி நிஷா: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தனி ஆளாக வந்த நிஷா, இன்று விஜய் டிவியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார் எனலாம். அதற்கு காரணம் அவரின் திறமை தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராமர் வீடு, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை , குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், பிக் பாஸில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் மனதை வென்றார்.
சின்னத்திரை VS சினிமா: சின்னத்திரையில் மட்டுமே கலக்கி வந்த இவர் தனுஷ் நடித்த மாரி2 படத்தில் சாய்பல்லவியின் தோழியாக ஆட்டோ ஓட்டுநராக வந்தார். அதே போல, ஆண் தேவதை, கோலமாவு கோகிலா , திருச்சிற்றம்பலம், ஜெயிலர் அண்மையில் தியேட்டரில் சக்கைப்போடு போட்ட ராயன் படத்திலும் நடித்துள்ளார்.
நிஷா வேதனை: ஒரு பக்கம் சின்னத்திரை மற்றொரு பக்கம் சினிமா என பிஸியாக இருக்கும் அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் இருந்து விலகி விட்டார் என்றும், இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டு சோஷியல் மீடியாவில் போஸ்டர் ஒன்று பரவி வருகிறது. இது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த நிஷா. யாரு பார்த்த வேலை சாமி இது, ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தேன் டா உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டு இருக்கீங்க...... hiyooooo என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அவரின் தீவிர ரசிகர்கள் சிலர் அப்போ நீங்க விலகலையா?. நானே அதிர்ச்சி ஆகிட்டேன் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தனிப்பட்ட விமர்சனம் வேண்டாம்: நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிஷா, மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை குறித்து பேசினார். அதில், உண்மையிலேயே அவர்களுக்குள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அந்த இடத்திலும் நான் இல்லை. ஆனால்,பெண்ணாக மட்டும் இதைப்பார்க்கிறேன் ஒருவர் தொழில் சார்ந்த குறை சொல்லி இருந்தால் அந்த தொழிலைப் பற்றி மட்டும் கமெண்ட் போடுங்க. தேவையில்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவருடைய கேரக்டரை குறித்தும் பேச தேவை இல்லை. ஒரு பெண்ணை இழிவு படுத்தி எதுவும் போடாதீர்கள் என்று பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











