ஆயுதபூஜை: விஜய் டிவியில் தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு
ஓகே.. ஆயுத பூஜை வந்து விட்டது. டிவி சானல்களில் படம் போட ஆயத்தமாகி வருகின்றனர்.
விழாக் காலங்களில் படமாகப் போட்டு்த் தள்ள வேண்டும் என்ற அடிப்படையி், விஜய் விடியிலும் ஏகப்பட்ட படங்களுடன் பூஜையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்த ஆயுத பூஜைக்கு விஜய் டிவியில் பல சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளதாம்.

பல படங்கள்
விஜய் டிவியில் ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

விஜயதசமிக்கும் சிறப்புப் படங்கள்
அக்டோபர் 13, 14 தேதிகளில் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விடுமுறை தினம் என்பதால் தொலைக்காட்சிகளில் பல்வேறு சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

2 நாட்களும் புதுப் படங்கள்
விஜய் டிவியில் புத்தம் புதிய திரைப்படங்கள் இரண்டு தினங்களும் ஒளிபரப்பாக உள்ளன.

காலையில் தில்லுமுல்லு
சிவா, பிரியா ஆனந்த் நடித்த தில்லுமுல்லு திரைப்படம் காலை நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

மாலையில் தீயா வேலை செய்யணும்
சித்தார்த், ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் மாலையிலும் ஒளிபரப்பாக உள்ளது.

ஓ..ஜாக்கி
ஜாக்கிசான் நடித்த சிஇஜட் 12 சைனீஸ் ஜோடியாக் திரைப்படமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











