விஜய் டிவியில் சைவம், முண்டாசுப்பட்டி, நெடுஞ்சாலை… ஆயுதபூஜை ஸ்பெசல்

By Mayura Akilan

விஜய் டிவியில் ஆயுதபூஜை தினத்தன்று சைவம், முண்டாசுப்பட்டி திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. விஜயதசமி தினத்தன்று நெடுங்சாலை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

அதோடு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், சூப்பர் ஹிட் திரைப்படங்களும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.

ஜீ தமிழ் டிவியில் யான்

ஜீ தமிழ் டிவியில் யான்

பிரபல இந்திய ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் 'யான்' படம் உருவான காட்சிகள் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. நடிகர் ஜீவா, நடிகை துளசி மற்றும் படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்த சுவாரஸ்யங்களை வெளியிட உள்ளனர்.

அரவிந்தின் ஹோம் மினிஸ்டர்

அரவிந்தின் ஹோம் மினிஸ்டர்

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்ற, ஜீ தமிழ் டிவியின் ஹோம் மினிஸ்டர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அரவிந்த் அவர்களின் திருமண வைபவம் ஒளிபரப்பாக உள்ளது.

ஸ்கைபால்

ஸ்கைபால்

சர்வதேச அளவில் வசூல் சாதனை நிகழ்த்திய அதிரடி ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் ஸ்கைபால் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அம்பிகாபதி

அம்பிகாபதி

தனுஷின் அறிமுக பாலிவுட் படம், 100 கோடி வசூல் என எண்ணற்ற பெருமைகளை கொண்டுள்ள அம்பிகாபதி திரைப்படம் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

தேசிங்கு ராஜா

தேசிங்கு ராஜா

விமல், பிந்து மாதவி, சூரி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற தேசிங்கு ராஜா திரைப்படம் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

நாங்களும் ஹீரோதான்

நாங்களும் ஹீரோதான்

அண்மையில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற ஹிட் படங்களில் நடித்த துணை நடிகர்களுடன் ஒரு கலகலப்பான உரையாடல் - நாங்களும் ஹீரோதான் கலர்புல் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

எனக்குள் ஒருவன்

எனக்குள் ஒருவன்

விஜய் சேதுபதி மற்றும் சமந்தா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற, சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் படத்தின் இசைவெளியீட்டு விழா காலை 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

சரஸ்வதி சபதம்

சரஸ்வதி சபதம்

மகத்தான வாழ்க்கைக்கு தேவையானது கல்வியா, செல்வமா, வீரமா எனும் தலைப்பில், பிரபல தொகுப்பாளர் சகா தலைமையில் நடைபெறும் சிறப்பு விவாத நிகழ்ச்சி - சரஸ்வதி சபதம் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா

கேடி பில்லா கில்லாடி ரங்கா

விமல், சிவகார்த்திகேயன் கூட்டணியில் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வரவேற்பு பெற்ற கேடி பில்லா கில்லாடி ரங்கா நகைச்சுவை திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

கோலிசோடா

கோலிசோடா

கோயம்பேட்டு சந்தையில் வேலைசெய்யும் சிறுவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரித்து, இந்தாண்டின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படம் எனும் பெருமையைப் பெற்ற கோலிகோடா மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

வடகறி

வடகறி

ஜெய், ஸ்வாதி நடிப்பில், காமெடி த்ரில்லலாக அண்மையில் வெளியாகி அனைவரது பாராட்டைப் பெற்ற வடகறி திரைப்படம், தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக , உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில்

விஜய் டிவியில்

ஆயுதபூஜை தினமான அக்டோபர் 2ஆம் தேதி சைவம், முண்டாசுப்பட்டி திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. அக்டோபர் 3ஆம் தேதி விஜயதசமியன்று நெடுஞ்சாலை திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X