Sangamam episodes: பாக்கியாவால் ராஜியை கண்டுபிடிக்கும் கோமதி.. உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு!
சென்னை: விஜய் டிவியின் சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகின்றன. அந்த வகையில் முன்னணி சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் தற்போது சங்கமத்தில் இணைந்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்த சிரியல்களின் நாயகிகள் பாக்கியா மற்றும் கோமதி உள்ளிட்டவர்கள் தற்செயலாக சந்திக்க நேர்வதையும் தொடர்ந்து அவர்கள் தோழிகளாக மாறுவதையும் தற்போது இந்த சங்கமம் எபிசோட்களில் பார்க்க முடிகிறது. மேலும் பாக்கியாவிற்கு ஏற்படும் நெருக்கடியில் கோமதி உதவியதையும் அடுத்தடுத்த எபிசோட்கள் காட்சிப்படுத்தின.
இந்நிலையில் தற்போது கோமதியின் அண்ணன் மகள் திருமணத்தின்போது வீட்டை விட்டு ஓடிப்போக அதனால் ஏற்படும் பிரச்சினையில் அவர் கதிகலங்கிப் போகிறார். 28 வருடங்களுக்கு முன்பு தான் செய்த தவறை தற்போது தன்னுடைய அண்ணன் மகளும் செய்துள்ளதை நினைத்து அவர் கலங்கிப்போய் நிற்கிறார். இதை அறியும் பாக்கியாவும் வருத்தம் கொள்கிறார். இதனிடையே அவரது அண்ணன் மகள் என்று தெரியாமலேயே ராஜிக்கு இக்கட்டான சூழலில் பாக்கியா உதவி செய்கிறார். மேலும் கோமதிக்கு ராஜி தன்னிடம் இருப்பதை தெரியப்படுத்துவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி -பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் காணப்படுகின்றன. டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று முதல் ஐந்து இடங்களில் உள்ளன. ரசிகர்களை அதிகமாக கவர்ந்துவரும் இந்த சீரியல்களின் சங்கமம் தொடர் தற்போது நிகழ்ந்து வருகிறது. இரு குடும்பத்தினரும் திருச்செந்தூரில் சந்தித்துக் கொள்ள கோமதி மற்றும் பாக்கியா இடையில் நட்பு மலர்கிறது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள அந்த நட்பு அதிகரிக்கிற்து. சமையல் கான்டிராக்டிற்காக பாக்கியா சென்ற நிலையில், ஆட்கள் குறைபாடால் அவர் தவிக்கிறார். அப்போது கோமதி உதவிக்கரம் நீட்டுகிறார்.
பாக்கியா -கோமதி நட்பு: சமையலில் பாக்கியாவிற்கு கோமதி உதவுவதால் பெரிய இக்கட்டில் மாட்டவிருந்த பாக்கியா சிறப்பாக அந்த கான்டிராக்டை நிறைவு செய்து தன்னை சிபாரிசு செய்த அமைச்சரிடமும் பாராட்டு பெறுகிறார். இதனிடையே கோமதியின் அண்ணன் மகள் ராஜி திருமணத்தின்போது தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் அவரது குடும்பத்தினர் அவமானத்திற்கு உள்ளாகின்றனர். மனம் வெறுத்து ராஜியின் அப்பா முத்துவேல் தற்கொலைக்கு முயல்கிறார். இதனிடையே ராஜி வீட்டில் தெரியாமல் எடுத்துவந்த பணம், நகையை எடுத்துக் கொண்டு அவரது காதலன் கம்பி நீட்டுகிறார்.
மனம் கலங்கும் கோமதி: இதனால் செய்வதறியாமல் ராஜி திகைக்கும் நிலையில், அவரை காப்பாற்றி தன்னுடனேயே இருக்க செய்கிறார் பாக்கியா. தொடர்ந்து மறுநாள் கோமதி அங்கிருந்து தன்னுடைய ஊருக்கு செல்வதற்கு முன்பாக பாக்கியாவை சந்திக்கிறார். அப்போது ராஜி குறித்து பேசும் அவர், அவரது புகைப்படத்தையும் காட்டுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் பாக்கியா, ராஜி தன்னுடன்தான் இருப்பதாக கூறி, அவரை அழைத்து செல்கிறார். தன்னுடைய அண்ணன் மகளை பார்க்கும் கோமதி, கோபமடைந்தாலும் அவருடைய பரிதாப நிலையை நினைத்து மனம் கலங்குகிறார். ராஜியும் கோமதியை பார்த்ததும் மனம் பரிதவித்து அவரை கட்டிப்பிடித்து அழுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
ராஜியை காப்பாற்றும் பாக்கியா: பாக்கியா இந்த விஷயத்தில் முன்பின் தெரியாத பெண் என்றும் பார்க்காமல் ராஜிக்கு உதவி செய்கிறார். மனம் வெறுத்துப் போகும் ராஜியை தன்னுடைய அறையிலேயே தங்க வைக்கிறார். ராஜி ஏதாவது செய்துக் கொள்வாரோ என்ற அக்கறையில் இரவு முழுவதும் முழித்திருந்து அவரை பாதுகாக்கிறார். அவரது வீட்டில் கொண்டு சென்று ராஜியை பாதுகாப்பாக விடுவதாகவும் கூறுகிறார். இந்நிலையில் கோமதியின் அண்ணன் மகள் என்ற உண்மை தெரியவருகிறது. இதையடுத்து அடுத்தடுத்த எபிசோட்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தன்னுடைய அண்ணன் மகளின் வாழ்க்கை மோசமடைந்துள்ள நிலையில் கோமதியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











