கோவை ரசிகைகளுக்கு அடித்தது ஜாக்பாட்… பாக்யலட்சுமி சீரியல் கொண்டாட்டம் !

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை தினந்தோறும் மக்கள் பார்த்து வருகிறார்கள். இந்த சீரியலுக்கு குடும்பத் தலைவிகள் ஆஜராகி விடுகிறார்கள்.

Vijay Tv baakiyalakshmi serial fans meet in Coimbatore

இது இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியலாகவே இருந்து வருகிறது. வெளியே வேலைக்குச் செல்லாமல் வீட்டில் ஹவுஸ்ஃவைய்ப்பாக இருக்கும் பெண்கள் எத்தகைய கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்வதுதான் பாக்கியலட்சுமி.

பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். பிடிக்காத மனைவியுடன் வாழ்ந்து வருவதாக பொய்யை கூறியே ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார் கோபி. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய திட்டமிடும் கோபி, பாக்யாவை ஏமாற்றி கையெழுத்து வாங்கி நீதிமன்றத்திற்கும் அழைத்து சென்று விடுகிறார். தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருகிறது.

இந்நிலையில், பாக்யலட்சுமியின் நடிகர்கள் மற்றும் குழுவினரை சந்திக்கும் வாய்ப்பு கோயம்புத்தூரில் உள்ள பெண்களுக்கு கிடைத்துள்ளது. தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் மேடையில் அசத்தலான நடிப்பைக் காண ரசிகர்கள் தயாராகி உள்ளனர். இன்று மாலை பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் கோவையில் உள்ள சிவாலயா ஆடிடோரியத்தில் பெண் ரசிகைகள் சந்திக்க உள்ளனர். அவர்களோடு சேர்ந்து மேடையில் பர்பாமென்ஸ் செய்ய உள்ளனர். மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பெண்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினருடன் சூப்பர் சிங்கர் டீம் உட்பட அறந்தாங்கி நிஷாவும் பங்கேற்க உள்ளார். மேலும் எழிலாக நடித்து வரும் விஷால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த ஒரு மாலை. சீரியலில் இருந்து பல நட்சத்திரங்கள் மற்றும் சில பிரபலமான முகங்கள் மற்றும் ஸ்டார் விஜய்யின் சூப்பர் சிங்கர் குழு ஆகியவை கோவையில் மேடையில் நேரடியாக பார்வையாளர்களை கவர தயாராக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X