நானே ஒரு டம்மி பீஸ்.. அட்வைஸ் பண்ணல.. பாக்கியலட்சுமி நடிகர் வேதனை!
சென்னை: ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடித்து வரும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டரை மணிநேரம் திரைப்படங்களை விட, தினமும் புது புது ட்விஸ்ட்டுகளுடன் வரும் சீரியலைத்தான் ரசிகர்கள் விரும்பி ரசித்து பார்க்கிறார்கள். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் கொண்டாடும் முக்கியமாக சீரியல்களில் ஒன்றாக உள்ளது.

பாக்யலட்சுமி சீரியல்: இந்த சீரியலின் பாக்கியலட்சுமியாக வரும் சுசித்ரா ஷெட்டி கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அழகாக நடித்து வருகிறார். பாக்கியாவின் கணவராக வரும் கோபி, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ராதிகாவுடன் உறவில் இருந்து, பாக்யாவை ஏமாற்றி அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது பாக்யா, ராதிகாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இப்படி கதை விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது.
நானே ஒரு டம்மி பீஸ்: இந்தநிலையில், இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகர் சதீஷ், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். நான் ரசிகர்களுக்கு ஓவராக அட்வைஸ் செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். நான் அட்வைஸ் சொல்லல, 'நான் ஒரு டம்மி பீஸ். ஏதோ இந்த சூழ்நிலையில் ஆண்டவன் அருளால் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக பெயரும் புகழும் கிடைச்சு இருக்கு. நான் யாருக்கும் அறிவுரை சொல்லவில்லை, என் அனுபவத்தை தான் ஷேர் செய்கிறேன் என கூறியுள்ளார்.
கண்ணீர் பேச்சு: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை ஏமாற்றி வந்த கோபியை பல இல்லத்தரசிகள் அது சீரியல் என்றும் பார்க்காமல் திட்டி வந்தனர். இதனால், கண்கலங்கிய சதீஷ், அது சீரியலுங்க என்னை திட்டாதீங்க என்று கண்ணீருடன் பேசினார். 5 வயதில் தம்பி இறந்துவிட்டான், விபத்தில் பெற்றோரையும் இழந்தேன். இரண்டு சட்டை, இரண்டு அரை ட்ரவுசர் மட்டும் தான் வைத்து ஒரு அனாதையாக சென்னைக்கு வந்து என் அத்தை வீட்டில் தான் வாழ்ந்தேன், வளர்ந்தேன். எனக்கு தமிழ் பேச சொல்லிக் கொடுத்து, வாழ்க்கை கொடுத்து, இப்போது வருமானம் கொடுத்து, எனக்கு பெயர் புகழ் கொடுத்து இன்றும் என்னை வாழ வைப்பது தமிழன்னை தான் என்று பேசி இருந்தார். அதன் பிறகு தான் அவரை திட்டுவதை ரசிகர்கள் குறைத்துக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications











