Baakiyalakshmi: ரோட் ட்ரிப்பை தள்ளி வைக்கலாமா.. கோபி கேட்ட கேள்வி.. கடுப்பில் இனியா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரின் டிஆர்பி சரிந்துள்ள போதிலும் ரசிகர்களை கவர பாக்கியலட்சுமி சீரியல் தவறவில்லை.

தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களை சிறப்பாக கொடுத்துவரும் பாக்கியலட்சுமி தொடரில் ரசிகர்கள் கொண்டாட பல விஷயங்கள் காணப்படுகிறது.

Vijay TV Baakiyalakshmi serial new episode makes fans more thrilling

இனியாவுடன் ப்ராஜெக்ட் ட்ரிப்பை கேன்சல் செய்த கோபி: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து பல மாதங்களாக முதலிடத்தில் அதிகமான டிஆர்பி ரேட்டிங்குடன் காணப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடர் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் பல மாற்றங்கள் சீரியல்களில் காணப்பட்டன. சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரை பீட் செய்து தனது முதலிடத்தை கயல் சீரியல் கைப்பற்றியது. சீரியல்களின் வரிசையில் பல மாற்றங்களை காண முடிந்தது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில தினங்களாக மீண்டும் தன்னுடைய பரபரப்பை மீட்டெடுத்துள்ளது. இந்தத் தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்கள் காட்சிப்படுததப்பட்டு வருகின்றன. தன்னுடைய வாழ்க்கையின் லட்சியங்களை தான் அடையவும் தன்னை கேலி செய்தவர்கள் முன்பு தன்னை சிறப்பாக காட்டவும் கைக்கொடுத்த கேன்டீன் கான்டிராக்ட் பறிபோகும் சூழலை எதிர்கொண்டார் பாக்கியா. ஆனால் சரியான நேரத்தில் அங்கிருந்த பழனிச்சாமி கொடுத்த ஆலோசனைப்படி கம்பெனியின் நிறுவனரிடம் பேசி இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கிறார் பாக்கியா.

தொடர்ந்து ஜெனிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக வீட்டிலேயே நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்ல, செழியன் -மாலினியின் நெருக்கம் அதிகமாக இது காரணமாக அமைகிறது. இதனிடையே எழிலுக்கு ஆவணப்படம் எடுக்க சான்ஸ் கிடைக்கிறது. ராதிகாவின் மகள் மயூ பெரிய மனுஷியாக, அதனால், இனியாவுடன் அவருடைய கல்லூரி ப்ராஜெக்ட்டிற்காக கேரளா செல்லும் ரோட் ட்ரிப்பை கேன்சல் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறார் கோபி.

Vijay TV Baakiyalakshmi serial new episode makes fans more thrilling

மயூவிற்கு தண்ணீர் ஊற்றும் விழா நடைபெறுவதால் அவரால் இனியாவுடன் நேரம் செலவழிக்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், அவர் அந்த ட்ரிப்பை தள்ளி வைக்க முடியுமா என இனியாவிடம் கேட்கிறார். இதனிடையே செழியனும் மாலினியுடன் நேரம் செலவழிப்பதால் அவரும் செல்ல முடியாது என்று கூற, எழிலுக்கும் ஆவணப்படம் எடுக்கும் ப்ராஜெக்ட்டால் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் தன்னுடைய அப்பா கோபி மீது இனியா மிகுந்த கடுப்பாகிறார். இந்த ப்ராஜெக்ட்டை தன்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பரிதவிப்பை வெளிப்படுத்துகிறார்.

இதையடுத்து தான் இனியாவை அழைத்துப் போகட்டுமா என்று கேட்கிறார் பாக்கியலட்சுமி. ஆனால் இதை காதில் கூட போட்டுக் கொள்ளாமல், அம்மா சும்மா இரும்மா என்று கூறுகிறார் இனியா. தன்னுடைய அம்மாவால் இது சாத்தியமில்லை என்று அவர் கருதுகிறார். இந்நிலையில், பாக்கியலட்சுமிதான் இனியாவை ரோட் ட்ரிப்பிற்கு கேரளா வரை அழைத்து செல்லும் நிலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரிப்பில் அம்மா -மகள் இடையிலான புரிதல் மற்றும் கலகலப்பு மேலும் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X