Baakiyalakshmi: அம்பலமான சதித்திட்டம்.. ராதிகாவிடம் புலம்பித்தள்ளிய கோபி!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்களாக நீடித்துவந்த பாக்கியலட்சுமி தன்னுடைய இடத்திலிருந்து கடந்த சில வாரங்களாக பின்தங்கியுள்ளது.

தன்னுடைய முதலிடத்தை மீண்டும் பெறும் வகையில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. பாக்கியாவை பழி வாங்கும் நோக்கத்தில் வீடு புகுந்து அவரது டிரைவிங் லைசென்சை திருடிய கோபியின் சதித்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans thrilling

பாக்கியலட்சுமி தொடரில் அம்பலமான கோபியின் சதித்திட்டம்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி கடந்த சில வாரங்களாக தன்னுடைய முதல் இடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் இழந்து பரிதவித்து வருகிறது. தன்னுடைய முதலிடத்தை மீண்டும் பெறும் நோக்கத்தில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தொடரின் இயக்குநர் கொடுத்து வருகிறார். இனியாவின் ப்ராஜெக்ட் வொர்க்கிற்காக பாக்கியா, ஈஸ்வரி, இனியா மற்றும் செல்வி என நான்கு பெண்கள் மட்டுமே கேரளாவிற்கு சென்றது மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

கடந்த வாரத்தில் இந்தத்தொடர் தன்னுடைய முதலிடத்தை சில புள்ளிகளில் இழந்துள்ளது. இந்நிலையில் வரும் வாரங்களில் மீண்டும் முதலிடத்தை பாக்கியலட்சுமி தொடர் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளவிற்காக சென்ற பயணம் மிகவும் சவால் நிறைந்ததாக அதிகமான பிரச்சினைகளை கொடுப்பதாக பாக்கியாவிற்கு அமைந்தது. தன்னுடைய நிதானமான போக்கினால் அவற்றை எல்லாம் எளிமையாக கையாண்டார் பாக்கியா.

இந்த விஷயம் எப்போதும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் மாமியார் ஈஸ்வரிக்கும் தன்னுடைய அம்மாவை பொருட்டாகவே மதிக்காமல் இருந்த இனியாவிற்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இதனால் இனிமேல் தன்னுடைய மருமகள் பாக்கியா சென்றால், அந்த இடத்திற்கு எந்தவித தயக்கமும் இல்லாமல் தான் செல்லத் தயார் என்று ஈஸ்வரியை சொல்ல வைத்துள்ளது. இதேபோல தன்னுடைய அம்மாவின் தைரியம் உள்ளிட்ட மாற்றங்களை மிகவும் வியப்புடன் பார்க்கிறார் இனியா.

Vijay TVs Baakiyalakshmi serial new episode makes fans thrilling

கேரளாவில் இருந்து திரும்பும்போது தேவையில்லாமல் ஒரு விபத்தில் பாக்கியாவின் கார் சிக்குகிறது. கையில் இருந்த டிரைவிங் லைசென்ஸ் முன்னதாக தொலைந்த நிலையில், போலீசாரிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறார் பாக்கியா. அந்த நேரத்தில் பழனிச்சாமியின் அறிவுறுத்தலும், வீட்டிலிருக்கும் ஒரிஜினலை காப்பியெடுத்து அனுப்பி வைக்க தன்னுடைய மாமனார் மற்றும் மருமகள் அமிர்தாவிடம் கேட்கிறார்.

அவர்கள் வீட்டில் சென்று பார்க்கும்போது, அந்த லைசென்ஸ் காணாமல் போனது தெரிகிறது. முன்னதாக பாக்கியாவின் வீட்டிற்கு திருட்டுத்தனமாக வரும் கோபி, அந்த லைசென்சை திருடிக் கொண்டு செல்கிறார். அவர் உடைத்துப்போடும் லைசென்ஸ் பழனிச்சாமிக்கு கிடைக்க, அவர் அதை அனுப்பி வைக்க, பாக்கியாவின் பிரச்சினை தீர்கிறது. இந்நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்படும் எழில், கோபியின் வீட்டிற்கு சென்று திட்டித் தீர்க்கிறார்.

இதனிடையே, பழனிச்சாமியிடம் எப்படி பாக்கியாவின் லைசென்ஸ் இருந்தது என்று வீடு புகுந்து பாக்கியாவை கேவலப்படுத்துகிறார் கோபி. இதனால் குடும்பத்தினர் அவரிடம் கோபம் கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் அங்கே வரும் எழில், அவர் திருட்டுத்தனமாக வீடு புகுந்து, லைசென்சை திருடியது குறித்து அம்பலப்படுத்துகிறார். இதையடுத்து பாக்கியா, மாமனார், மாமியார் அனைவரும் கோபியிடம் கேள்வி எழுப்புகின்றனர். இதையடுத்து அவர் ராதிகாவிடம் புலம்பித் தள்ளுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X