Baakiyalakshmi Serial: எனக்கும் பாக்கியாவிற்கு போட்டி வந்தா நான்தான் ஜெயிக்கனும்.. ராதிகா பளீச்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா என மூன்று முதன்மை கேரக்டர்களையும் அவர்களின் உறவுகளையும் மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமணத்தால் தடைப்பட்ட தன்னுடைய படிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மீட்கும் முயற்சியில் கதையின் நாயகி பாக்கியலட்சுமி செயல்படுவதாக இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா என முதன்மை கேரக்டர்களையும் அவர்களது நெருங்கிய உறவுகளையும் மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்காலியில் புகழ்பெற்ற ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் தமிழுக்கு ஏற்ப மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.
காரணத்தை வெளிப்படுத்திய இயக்குநர்: இந்தத் தொடரில் கேரக்டர்கள் அனைவருக்கும் அவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு முக்கியமான காரணத்தை வெளிப்படுத்துகிறார் இயக்குநர். 25 ஆண்டுகள் பாக்கியாவுடன் வாழ்ந்த கோபி, ஒரு கட்டத்தில் விவாகரத்து முடிவை எடுக்கிறார். தன் மனதிற்கு பிடிக்காத பெண்ணை தன்னை கட்டாயப்படுத்தி தனக்கு தன்னுடைய தந்தை திருமணம் செய்து வைத்துவிட்டதாக அவர் கூறுகிறார். ஆனாலும் பாக்கியா தன்னை விட்டு விலகுவதை மற்றவர்களுடன் பழகுவதை அவரால் அனுமதிக்க முடியவில்லை.
மீண்டும் பூக்கும் நட்பு: முன்னதாக பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் தோழிகளாக இருந்த நிலையில், கோபி -ராதிகா திருமணம் அவர்களது நட்பை குலைக்கிறது. இந்நிலையில் தற்போது பாக்கியா வீட்டில் இருக்கும் ராதிகா, அந்த நட்பை புதுப்பிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். பாக்கியாவின் அடுத்தடுத்த பயணங்களில் ஈஸ்வரி, கோபி ஆகியோர் குறுக்கிடுவதை அவர் கேள்வி கேட்கிறார். இதனால் பாக்கியா மட்டுமில்லாமல் ரசிகர்களும் ஆறுதல் பெறுகின்றனர்.
சிறப்பான மாமியார்: தற்போது மாலினி விவகாரத்தால் செழியனை பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்கிறார் ஜெனி. மருமகளாக இருந்தாலும் அவருக்கே தன்னுடைய சப்போர்ட் என்று கூறுகிறார் பாக்கியா. இதன்மூலம் தான் சிறந்த மாமியார் என்பதையும் சிறந்த மனுஷி என்பதையும் அவர் நிரூபித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கை மற்றும் மகன்களின் வாழ்க்கை சிக்கல்களை தீர்க்கும் முயற்சியிலும் பாக்கியா ஈடுபட்டுள்ளார்.

பாக்கியாவிற்கு வாழ்த்து சொன்ன ராதிகா: அவரது கேன்டீன் கான்டிராக்ட் ராதிகாவால் பறிபோன நிலையில் தற்போது கோபியுடன் அவர் பாக்கியா வீட்டில் தங்க நேர்கிறது. இந்நிலையில் பாக்கியாவிற்கு புதிதாக கிடைத்துள்ள பொருட்காட்சி கேன்டீன கான்டிராக்டிற்காக ராதிகா வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். இந்த சூழலில் கேன்டீன் கான்டிராக்டை பறித்த ராதிகா, தற்போது வாழ்த்து கூறுவது முரணாக உள்ளதாக செல்வி கூறுகிறார். இதற்கான விளக்கத்தை ராதிகா செல்விக்கு தெரிவிக்கிறார்.
ராதிகா விளக்கம்: தன்னுடைய அலுவலகத்தில் பாக்கியா வேலை செய்தபோது தங்கள் இருவருக்கும் இடையில் அதிகமான பிரச்சினைகள் வந்ததை சுட்டிக் காட்டிய ராதிகா, அந்த பிரச்சினையில் தான் ஜெயிப்பதையே தான் விரும்பியதாகவும் அதனால்தான் பாக்கியாவை வேலையை விட்டு வெளியேற்றியதாகவும் ராதிகா கூறுவதாக இன்றைய எபிசோட் அமைந்துள்ளது. மேலும் பொருட்காட்சி கான்டிராக்டிற்காக மளிகை கடையில் பாக்கியா கடன் வாங்க, அதை கேள்விக் கேட்க முயற்சிக்கும் கோபியையும் அவர் தடுக்கிறார்.


Click it and Unblock the Notifications











