Baakiyalakshmi serial: ஈஸ்வரி விஷயத்தில் மீண்டும் சுயநலமாக யோசித்த கோபி.. கண்கலங்கிய பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. வீம்புக்காக பாக்கியாவை பழி வாங்கும் நோக்கத்துடன் தன்னுடைய அம்மாவை தன்னுடன் ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்கிறார் கோபி.
ஆனால் ராதிகா வீட்டில் தன்னுடைய அம்மாவிற்கும் மாமியாருக்கும் ஒத்து வராத சூழலில் மண்டையை பிடித்துக் கொள்ளும் நிலைக்கு கோபி தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த வார பிரமோவின் தன்னுடைய அம்மா விஷயத்தில் அவர் தன்னுடைய சுயநலத்தை வெளிப்படுத்துவதாக காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ராதிகாவின் கர்ப்பம் குறித்து தெரிய வந்த சூழலில் கோபியை வீட்டை விட்டு அவரது மகன்கள் வெளியேற கூறுகின்றனர். இதனால் ராதிகாவுடன் வெளியேறும் கோபி, பாக்கியாவை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு தன்னுடைய அம்மா ஈஸ்வரியை தன்னுடன் ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கு ஈஸ்வரிக்கும் ராதிகாவின் அம்மா கமலாவிற்கும் ஒத்து வராத சூழலில் இருவரும் தொட்டதற்கெல்லாம் சண்டையிட்டு கொள்வதாக காணப்படுகிறது.
ஈஸ்வரி -கமலா சண்டை: பாக்கியா வீட்டில் இருந்தது போலவே தன்னுடைய அதிகாரத்தை ராதிகா வீட்டில் காண்பிக்க முயற்சிக்கிறார் ஈஸ்வரி. ஆனால் இதற்கு கமலா உள்ளிட்டவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்குள் தொடர்ந்து சண்டை ஏற்பட ராதிகாவும் ஈஸ்வரியை பாக்கியா வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தொடர்ந்து கோபியை நச்சரிக்கிறார். இதனால் வீட்டில் நிம்மதி இல்லாத சூழல் காணப்படுகிறது. மேலும் தன்னுடைய கிளவுட் கிச்சன் பிசினசிலும் சரிவர கவனம் செலுத்த முடியாத நிலையில் கோபி காணப்படுகிறார். சில தினம் தன்னுடைய கிளவுட் கிச்சனுக்கு தன்னுடைய அம்மாவை அழைத்து சென்று அந்த பிரச்சனையில் இருந்து தற்காலிகமாக விடுபட முயற்சிக்கிறார்.
பாக்கியாவிடம் கோபி வேண்டுகோள்: இருந்தபோதிலும் கமலாவும் ஈஸ்வரியும் எலியும் பூனையுமாக தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். ஈஸ்வரியை பாக்கியா வீட்டிற்கு திருப்பி அனுப்பவும் முடியாத சூழலில் கோபி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் வெளியாகியுள்ள ப்ரமோவில் வாக்கிங் போகும் கோபி வழியில் பாக்கியாவை பார்த்து தன்னுடைய அம்மாவிற்கும் மாமியாருக்கும் ஒத்துவரவில்லை என்றும் இதனால் தொடர்ந்து இருவரும் சண்டையிட்டுக் கொள்வதாகவும் தன்னுடைய அம்மாவிடம் பேசி அவரை மீண்டும் பாக்கியா தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும் கோபி கூறுகிறார்.
ஈஸ்வரியை சந்திக்கும் பாக்கியா: பாக்கியா சொன்னால் ஈஸ்வரி அதை ஏற்றுக் கொள்வார் என்றும் கோபி தொடர்ந்து வற்புறுத்துகிறார். ஆனால் இதைக் கேட்கும் பாக்கியாவோ சாரி பாஸ், தன்னால் அது இயலாது என்று அவருக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியடைவதாக இந்த வார ப்ரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து கோயிலில் தன்னுடைய மாமியாரை சந்திக்கும் பாக்கியா அவருக்காக தான் எடுத்து வந்த உணவை எடுத்துக் கொடுக்கிறார். ஆனால் வீம்புடன் காணப்படும் ஈஸ்வரியோ தனக்கு வேண்டாம் என்று கூறி மறுக்கிறார். உடனே பாக்கியா, வேண்டாம் என்றால் அங்கேயே விட்டுவிட்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டு நகர்கிறார்.
இந்த வார ப்ரமோ: அவர் திரும்பி வந்து பார்க்கும்போது ஈஸ்வரி அந்த உணவை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பாக்கியாவின் கையால் சிறப்பான சுவையான உணவை சாப்பிடும் திருப்தியை வெளிப்படுத்துகிறார். இதை பார்க்கும் பாக்கியா கண்கலங்குகிறார். தொடர்ந்து தன்னுடைய மாமியாரிடம் வந்து மீண்டும் வீட்டிற்கு வந்து விடுங்கள் அத்தை என்று பாக்கியா கூறுகிறார். இதைக் கேட்கும் ஈஸ்வரியோ தான் மீண்டும் வீட்டிற்கு வந்தால் கோபி வருத்தப்படுவார் என்று கூறுவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது. ஈஸ்வரி தன்னுடைய மகனின் விருப்பங்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் நிலையில், கோபி தன்னுடைய சுயநலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











