Baakiyalakshmi serial: வீட்டிற்கு அழைத்த கோபி.. கையை தட்டிவிட்ட இனியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக இனியா தன்னுடைய நண்பர்களுடன் பப்பிற்கு சென்றது மற்றும் அதன் எதிரொலியாக வீட்டில் வெடித்த பிரச்சினைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இனியாவின் பிரச்சினையால் சமையல் போட்டியின் இறுதிச் சுற்றிலிருந்து பாக்கியா வெளியேறிய நிலையில், அந்தப் போட்டியில் கோபி ஜெயிக்கும் நிலை உருவானது. இதையடுத்து இனியாவின் பிரச்சினை குறித்து தெரிந்துக் கொள்ளும் கோபி, இதுகுறித்து பாக்கியா வீட்டிற்கு வந்து கேள்வி கேட்பதாக இந்த வார ப்ரமோவில் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களாக இனியா தன்னுடைய நண்பர்களுடன் பப்பிற்கு சென்றதும் தொடர்ந்து போலீசிடம் சிக்கியதும் ராதிகாவால் மீட்கப்பட்டதும் இதனால் குடும்பத்தில் வெடித்த பிரச்சினைகள் என அடுத்தடுத்த காட்சிகள் இந்த தொடரில் ஒளிபரப்பானது. ஒருகட்டத்தில் தான் மொத்தமாக வாழ்க்கையில் தோற்றுப் போய்விட்டதாக பாக்கியா கதறியதும் கடந்த எபிசோட்களில் காணப்பட்டது. தொடர்ந்து தான் எந்தமாதிரியான சூழலில் அப்படி செய்தேன் என்று கூறி இனியா மன்னிப்பு கேட்டதையும் கடந்த எபிசோடில் காணமுடிந்தது.
சண்டையிடும் கோபி: இதனிடையே, இந்த விஷயத்தை கேள்விப்படும் கோபி நள்ளிரவு ஆனபோதிலும் தன்னுடைய மகன் செழியனிடம் வந்து நடந்தது குறித்து கேட்டு தெரிந்துக் கொண்டு மன வருத்தத்துடன் சென்றதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பிரமோவில் இனியாவை பாக்கியா சரியாக வளர்க்கவில்லை என்று கூறி பாக்கியா வீட்டிற்கு வந்து அனைவரிடமும் சண்டையிடுகிறார் கோபி. தன்னுடைய மகளை இனி தான் சரியாக பார்த்துக் கொள்வதாக கூறி தன்னுடன் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு இனியாவிடம் கூறுகிறார். இதை பார்க்கும் ஈஸ்வரி இதே போல தானே தன்னையும் அழைத்து சென்றான் என்பதாக கோபியை திட்டுவதாக காணப்பட்டது.
கையை தட்டிவிட்ட இனியா: ஆனாலும் தன்னுடைய மகளை விட்டு எங்கேயும் தான் போக மாட்டேன் என்பதாக இனியாவின் கையைப் பிடித்து தன்னுடன் தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார் கோபி. தொடர்ந்து இனியாவோ தான் தன்னுடைய அம்மாவுடன் இருப்பதாக கூறுகிறார். பாக்கியாவும் இனியா எங்கேயும் வரமாட்டாள் என்று கூறிகிறார். ஆயினும் தொடர்ந்து கோபி வற்புறுத்தி இனியாவின் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல முயல, அவருடைய கையை தட்டி விடுகிறார் இனியா. இதனால் வருத்தம் மற்றும் ஏமாற்றம் மேலோங்க கோபி பாக்கியா வீட்டிலிருந்து வெளியேறுவதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது.
குடும்பத்தினர் அன்பை இழந்த கோபி: கோபிக்கு தன்னுடைய அம்மா ஈஸ்வரி, மகள் இனியா மற்றும் மகன் செழியன் மீது எப்போதுமே தனிப்பட்ட பாசம் அதிகமாக இருப்பதாக இந்த சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே தன்னுடைய அம்மாவை நம்பாமல், கடந்த சில வாரங்களாக பரிதவிக்க வைத்து சிறையில் அடைப்படவும் காரணமாக இருந்தார் கோபி. அவரது அன்பை கோபி இழந்துள்ள நிலையில் இனியா மற்றும் செழியனும் பாட்டி விஷயத்தில் கோபி நடந்துக் கொண்டது குறித்து மிகுந்த கோபத்தில் காணப்பட்டனர். இந்நிலையில் தற்போது கோபியுடன் செல்ல இனியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரின் அன்பையும் பாசத்தையும் தன்னுடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளால் கோபி இழந்துள்ளது தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











