Baakiyalakshmi serial: என் மகன் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன்.. மாமனாரிடம் கோபப்பட்ட பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எபிசோட்களாக கொடுத்து வருகிறது. ஜெனியின் அப்பா ஜோசப் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதை கேள்விப்படும் கோபி மற்றும் ஈஸ்வரி ஆத்திரத்துடன் முன்னதாக செழியனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று திருமண ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதையொட்டி பெண் வீட்டார் செழியனை பார்ப்பதற்காக பாக்கியா வீட்டிற்கு வருகின்றனர். ஜெனி மற்றும் செழியன் வாழ்க்கையில் மீண்டும் இணைவார்கள் என்று பெண் வீட்டாரிடம் பாக்கியா உறுதியுடன் கூறுகிறார்.
இதனிடையே ஜெனிக்காக தான் காத்திருப்பேன் என்று செழியனும் அறுதியிட்டு கூறுகிறார். இதனால் பெண் வீட்டார் அங்கிருந்து கிளம்புவதாகவும் ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் பாக்கியாவிடம் கோபப்படுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. தொடர்ந்து செழியன், எழில் மற்றும் இனியா வாழ்க்கையை பாக்கியா கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குவார் என்று ஈஸ்வரி திட்டித் தீர்க்கிறார். செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் தொடர்ந்து இடையூறு கொடுத்து வரும் மாலினி விவகாரத்தில் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடும் சிறப்பாக அமைந்துள்ளது. ஜெனிக்கு அவரது அப்பா ஜோசப் திருமண ஏற்பாடுகளை செய்வதை அறிந்து ஆத்திரப்படும் கோபி மற்றும் ஈஸ்வரி, முன்னதாக செழியனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகின்றனர். அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். செழியனை பார்ப்பதற்காக பெண் வீட்டார் பாக்கியா வீட்டிற்கு வருகின்றனர். இந்த விஷயத்தில் எதுவும் கூற முடியாமல் செழியன் தன்னுடைய அறைக்கு சென்று முடங்குகிறார். இதையடுத்து அங்கு வரும் பாக்கியா இந்த திருமண ஏற்பாடு குறித்து தெரிந்து செய்வதறியாமல் திகைக்கிறார்.
செழியனுக்கு மறுமண ஏற்பாடு: தொடர்ந்து செழியனின் அறைக்கு சென்று அவருக்கு புரிய வைக்கிறார். அப்போது பேசும் செழியன், தான் ஜெனி தன்னுடன் இணைவார் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ஜெனிக்கு வேறு திருமணமே நடந்தாலும் தான் வேறு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் தெளிவுபடுத்துகிறார். இதையடுத்து இதை கோபி மற்றும் ஈஸ்வரிக்கு செழியன் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் கண்டிப்பாக இந்த திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள் என்றும் பாக்கியா கூறுகிறார். இதையடுத்து இருவரும் கீழே வந்து பெண் வீட்டாரிடம் இதுகுறித்து பேசுகின்றனர்.
ஆத்திரத்தில் செழியன்: செழியனுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்பதை பெண் வீட்டாருக்கு பாக்கியா புரிய வைக்கிறார். ஜெனியுடன் இணைந்து வாழவே செழியன் விரும்புவதாகவும் கூறுகிறார். இந்நிலையில் பெண் வீட்டார் கோபத்துடன் இது குறித்து எல்லாம் தங்களிடம் பேசவில்லையே என்று கேட்கின்றனர். தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்த கோபி மற்றும் ஈஸ்வரி முயல்கின்றனர். இதை கேட்கும் செழியன் ஆத்திரத்துடன் இந்த திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறுகிறார். இதனால் பெண் வீட்டார் அங்கிருந்து செல்வதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
கண்கலங்கிய ஜெனி: இதையடுத்து ஜெனியும் செழியன் மற்றும் தான் இருக்கும் திருமண புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்து கண் கலங்குகிறார். இதை பார்க்கும் அவரது அம்மா மரியம், மகளுக்கு எப்படி ஆறுதல் தெரிவிப்பது என்பது தெரியாமல் அவரது அறையிலிருந்து வெளியேறுகிறார். இந்நிலையில் செழியன் விவகாரத்தில் பாக்கியா அவசரப்படுவதாக அவரது மாமனார் ராமமூர்த்தி கூறுகிறார். ஜெனிக்கு வேறு திருமணம் செய்யும்போது செழியனுக்கு ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று அவர் கேள்வி எழுப்புகிறார். செழியனின் வாழ்க்கையை இப்படியே விட்டு விட முடியாது என்றும் அவர் பாக்கியாவிடம் கூறுகிறார்.
மாமனாரிடம் கோபப்படும் பாக்கியா: இதையடுத்துப் பேசும் பாக்கியா, தன்னுடைய மகனுக்கு மற்றொரு வாழ்க்கையை அமைத்து தர முடியாது என்று கூறுகிறார் தன்னுடைய மகன் செழியன் ஜெனியுடன் இணைந்து வாழவே விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்து வருவதாகவும் பாக்கியா கூறுகிறார். தொடர்ந்து ராமமூர்த்தி பாக்கியாவை சமாதானப்படுத்த முயல்கிறார். இதையடுத்து கோபமாகும் பாக்கியா, மாமனாரை எதிர்த்து பேசுகிறார். தன்னுடைய மகனின் வாழ்க்கையை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்று பாக்கியா பேசுகிறார். இதனால் மனமுடையும் ராமமூர்த்தி அங்கிருந்து போவதாக இந்த எபிசோடில் காணப்பட்டது.
பாக்கியாவை அவமானப்படுத்தும் ஜோசப்: இதையடுத்து ஜெனி வீட்டிற்கு செல்லும் பாக்கியா, செழியனுக்கு தன்னுடைய வீட்டார் திருமண ஏற்பாடுகளை செய்வதாக தெரிவிக்கிறார். ஜெனி மற்றும் செழியனை ஒருமுறை பேசவிட்டால் அவர்களது பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று புரிய வைக்கிறார். ஆனால் இதையெல்லாம் கேட்காமல் ஜோசப் தொடர்ந்து பாக்கியாவை அவமானப்படுத்துகிறார். அவருக்கு ஆதரவாக பேச முயலும் ஜெனியை அறைக்குள் வைத்து பூட்டுகிறார். செழியனுக்கு அவரது குடும்பத்தினர் தாராளமாக மறுமணம் செய்து வைக்கலாம் என்றும் கூறுகிறார். ஆனால் இதை கேட்டு பதறும் ஜெனி, அறைக்கதவை திறக்குமாறு கதறுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











