Baakiyalakshmi: வீட்டிற்கு தெரியாமல் செழியன் -ஜெனி மீட்டிங்.. அட செழியனுக்கு கூடவா சொல்ல மாட்டீங்க!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் மாலினி விவகாரத்தால் செழியனிடம் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறார் ஜெனி. அவரை சமாதானப்படுத்தும் பாக்கியலட்சுமி குடும்பத்தினரின் முயற்சி தொடர்ந்து தோல்வியில் முடிகிறது. இதனிடையே ஜெனிக்கு மறுமணம் செய்து வைக்க அவரது அப்பா ஜோசப் முயற்சி மேற்கொள்கிறார். இது குறித்து தெரிந்த கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் ஜெனிக்கு முன்னதாக செழியனுக்கு மறுமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இதை தெரிந்து பாக்கியா அவர்களிடம் கோபப்படுகிறார். செழியனும் ஆத்திரத்துடன் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறுகிறார். ஆனாலும் அவர்கள் தங்களது முயற்சியை நிறுத்தாமல் தொடர்கின்றனர். இதனிடையே செழியன் மற்றும் ஜெனி இருவரும் இணைந்து பேசினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் என்று பாக்கியா, ஜெனியின் அப்பா ஜோசப்பிடம் அவரது வீட்டிற்கு சென்று கூறுகிறார். தன்னுடைய குடும்பத்தினர் செழியனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்வதையும் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் பாக்கியாவை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

Vijay TV s Baakiyalakshmi serial today 26th March 2024 episode Chezhiyan going to meet Jeni

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் செழியன் மற்றும் ஜெனியின் வாழ்க்கையில் மாலினியால் ஏற்பட்ட பிரச்சனையால் கோபித்துக் கொண்டு தன்னுடைய குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் ஜெனி. அவரை சமாதானப்படுத்த பாக்கியா குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டனர். அவையனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இதனிடையே செழியனிடமிருந்து ஜெனிக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து அவருக்கு மறுமணம் செய்து வைக்க ஜெனியின் அப்பா முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

மாமனாரிடம் பாக்கியா கோபம்: ஜெனியின் மறுமண ஏற்பாடுகள் குறித்து தெரிந்து கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் ஜெனிக்கு முன்னதாக செழியனுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இது குறித்து தன்னிடம் பேச வரும் மாமனார் ராமமூர்த்தியிடம் கோபப்படுகிறார் பாக்கியா. தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரிடம் அதிர்ந்தும் பேசாத பாக்கியா அடுத்தடுத்து அவர்களிடம் கோபப்பட்டு பேசும் சூழ்நிலைகளை தற்போது பார்க்க முடிகிறது. இந்நிலையில் தன்னுடைய மகன், ஜெனியுடன் இணைந்து வாழ்வதுதான் சரியாக இருக்கும் என்றும் பாக்கியா கூறுகிறார்.

மன்னிப்பு கேட்கும் பாக்கியா: தொடர்ந்து ஜெனி போன்ற ஒரு அருமையான பெண்ணை செழியன் மிஸ் செய்யக்கூடாது என்றும் ராமமூர்த்தியிடம் கூறும் பாக்யா ஒரு கட்டத்தில் அவரிடம் கோபப்பட்டு தன்னுடைய மகன் செழியனின் வாழ்க்கையை தான் பார்த்துக் கொள்வதாகவும் மற்றவர்கள் எதுவும் செய்யாமல் இருப்பதே சிறப்பாக அமையும் என்றும் ஆத்திரத்துடன் கூறுவதாக நேற்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய மாமனார் காலில் விழுந்து பாக்கியா மன்னிப்பு கேட்கிறார். தான் அப்படி பேசியிருக்கக் கூடாது என்றும் ஆனால் செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையை சரி படுத்தவே தான் முயல்வதாகவும் அதில் தனக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றும் கூறுகிறார்.

செழியன் -ஜெனி சந்திப்பு: இந்நிலையில் ஜெனி வீட்டிற்கு சென்று ஜெனி மற்றும் செழியனை இணைந்து பேச வைக்க வேண்டும் என்று ஜோசப்பிடம் பாக்கியா கோரிக்கை வைக்கிறார். இதனால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கூறுகிறார். ஆனால் அவரை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார் ஜோசப். இந்நிலையில் செழியனை தன்னுடைய மகள் ஜெனி எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் அவரை பிரிய மாட்டார் என்றும் மரியம் தெரிந்து கொள்கிறார். தொடர்ந்து பாக்கியாவிற்கு கால் செய்யும் மரியம் தன்னுடைய மகளின் மனநிலையை தான் புரிந்து கொண்டதாகவும் செழியன் மற்றும் ஜெனி இருவரையும் இணைந்து பேச வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

வீட்டிற்கு தெரியாமல் ஏற்பாடு: இதையடுத்து பாக்கியாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். மறுநாள் காலை யாருக்கும் தெரியாமல் செழியனை மரியம் குறிப்பிட்ட இடத்திற்கு ஜெனியை பார்ப்பதற்காக அழைத்துச் செல்ல முயல்கிறார் பாக்கியா. இந்த விஷயத்தை செழியனுக்கே கூறாமல் அவரை தயார்படுத்தி தாங்கள் ஒரு இடத்திற்கு செல்ல உள்ளதாக கூறுகிறார். எங்கு செல்கிறோம் என்று தெரியாத நிலையில் செழியனை அழகாக தயார் படுத்துகின்றனர். இதையடுத்து செழியன், பாக்கியா மற்றும் எழில் மூவரும் கீழே இறங்கி வருகின்றனர். அப்போது அங்கே இருக்கும் ராமமூர்த்தி, ஈஸ்வரி, கோபி மூவரும் இவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று கேட்க தடுமாற்றத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கூறுவதாக இன்றைய எபிசோட் நிறைவு பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X