Baakiyalakshmi serial: நான் முதியோர் இல்லத்திற்கு போகிறேன்.. பெட்டியுடன் கிளம்பிய ஈஸ்வரி!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னுடைய அம்மாவிற்கும் மாமியாருக்கும் தொடர்ந்து சண்டை வருவதால் தான் தன்னுடைய பிசினஸை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும் இதே போல சென்றால் தான் பழைய பிசினஸை கோட்டை விட்டது போலவே இந்த பிசினசையும் விட வேண்டியது வரும் என்றும் கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரியிடம் ஆத்திரப்படுகிறார்.

இதனால் மன வருத்தம் கொள்ளும் ஈஸ்வரி, தான் அந்த வீட்டை விட்டு செல்வதாகவும் ஆனால் நேரடியாக பாக்கியா வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்றும் முதியார் இல்லத்திற்கு செல்ல உள்ளதாகவும் கூறுகிறார். இதனால் கோபி உடனடியாக இறங்கி வருகிறார். கோபத்தில் இருக்கும் தன்னுடைய அம்மாவை கோபி சமாதானப்படுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

Vijay tv s Baakiyalakshmi serial today 31st May 2024 episode

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடிலும் ஈஸ்வரி மற்றும் கமலாவின் சண்டை மற்றும் அதை ஒட்டிய சம்பவங்களை மையமாகக் கொண்டு எபிசோட் ஒளிபரப்பானது. நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி மற்றும் கமலா இடையில் நடைபெற்ற சண்டையில் ஈஸ்வரி உடனடியாக தன்னுடைய மகனை கிளவுட் கிச்சனிலிருந்து வரவழைக்கிறார். இதனால் பல பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும் வீட்டிற்கு கிளம்பி ஓடி வருகிறார் கோபி. இந்நிலையில் கமலாவிற்கும் ஈஸ்வரிக்கும் இடையில் நடந்த சண்டையை தீர்க்கும்வகையில் அவர் ஈஸ்வரியை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து செல்கிறார்.

ஈஸ்வரியிடம் கோபி ஆத்திரம்: மீண்டும் வீட்டிற்கு ஈஸ்வரி வந்ததும் சண்டை மீண்டும் விட்ட இடத்திலிருந்து துவங்குகிறது. இந்நிலையில் இந்த சண்டையைத் தொடர்ந்து கோபி தன்னுடைய அம்மாவிடம் ஆத்திரத்துடன் பேசுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. ஈஸ்வரியால் தான் தன்னுடைய பிசினஸில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட முடியவில்லை என்று கோபி ஆத்திரத்துடன் கூறுகிறார். அவர் கூப்பிட்டவுடன் ஓடி வருவதற்கே தனக்கு சரியாக இருப்பதாகவும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் கிளவுட் கிச்சனை அப்படியே விட்டுவிட்டு ஓடி வந்ததாகவும் பலவாறு கூறுகிறார். இதை கேட்கும் ஈஸ்வரி தன்னால் கோபியின் பிசினஸ் கெட வேண்டாம் என்றும் தான் அங்கிருந்து செல்வதாகவும் கூறுகிறார்.

முதியோர் இல்லத்திற்கு போகிறேன்: உடனே பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் ஈஸ்வரி, தான் திரும்பி பாக்கியா வீட்டிற்கு சென்றால் தன்னுடைய கணவரே தன்னைப் பார்த்து சிரிப்பார் என்றும் அதனால் தான் அங்கே செல்ல மாட்டேன் என்றும் கோபியை நம்பி வந்ததற்கு தான் ஏதாவது முதியோர் இல்லத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் பலவாறாக பேசுகிறார். இதையடுத்து கோபியின் ஆத்திரம் தணிகிறது. தொடர்ந்து தன்னுடைய அம்மாவை சமாதானப்படுத்துகிறார். இந்நிலையில் நள்ளிரவில் கோபிக்கு பிளாக் காபி போட்டுக் கொடுக்கும் ராதிகா, அவருடைய அம்மா சரியாக நடந்து கொள்வதில்லை என்றும் எப்போதும் சண்டைக்கு தயாராக நிற்பதாகவும் கூறி அவருக்கு இந்த இடம் சரியாக இருக்காது என்றும் பாக்கியா வீட்டிற்கு செல்வதுதான் ஈஸ்வரிக்கு சரியாக இருக்கும் என்றும் கூறுகிறார்.


பாக்கியா உறுதி: ஆனால் தன்னுடைய அம்மாவை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கோபி கூறுவதாகவும் இன்றைய எபிசோட் காணப்பட்டது. இதனிடையே தன்னுடைய ரெஸ்டாரண்டிற்கு பக்கத்தில் பார் துவக்க விழாவை ஒட்டி சமையல் கான்டிராக்டை வாங்கியுள்ள பாக்கியா அதற்காக சீக்கிரத்திலேயே வீட்டை விட்டு கிளம்புகிறார். பழனிசாமி அறிவுறுத்தலால்தான் இந்த கான்ட்ராக்ட்டை வாங்கி உள்ளதாகவும் செல்வி உள்ளிட்ட தன்னுடைய ஊழியர்கள் அனைவரும் இதனால் மிகுந்த பயத்தில் உள்ளதாகவும் பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X