தப்புக்கு மேல தப்பு பண்றீங்க கோபி… பாக்கியலட்சுமி சீரியலில் இன்று !
சென்னை : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.
பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்யலட்சுமி சீரியல்
பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். பிடிக்காத மனைவியுடன் வாழ்ந்து வருவதாக பொய்யை கூறியே ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார் கோபி. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் கோபிக்கு எழுந்துள்ளது.

திக்குமுக்காடிய கோபி
இதனால், கோபி பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டார். இதையடுத்து, விவாகரத்திற்காக பாக்யாவையும் கோர்ட்டுக்கு அழைத்து வரவேண்டும் என வழக்கறிஞர் கூற திக்குமுக்காடிப்போன கோபி, என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.

நீங்கதான் முக்கியம் கோபி
கோபியின் முகம் மாறியதை கவனித்த ராதிகா, பாக்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வருவதில் என்ன பிரச்சினை, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டால் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று தெரியாதா என கேள்வி கேட்கிறாள். அப்படி இல்ல ராதிகா, கையெழுத்துப்போடவே வீட்டை எழுதி கேட்டாள். இப்போ, கோர்ட்டுக்கு வர சொன்னா என்ன பண்ணுவானு யோசித்தேன் என்று கூறி சமாளிக்கிறான் கோபி. உடனே ராதிகா, அவங்க எதை கேட்டாலும் கொடுத்துடுங்க கோபி எனக்கு நீங்கதான் முக்கியம் என்கிறாள் ராதிகா.

பாக்யாவை ஏமாற்றிய கோபி
வீட்டிற்கு வரும் கோபி, பாக்யாவிடம் கம்பெனியில் உன் பெயரை சேர்ப்பதற்காக கையெழுத்து வாங்கினேன் இல்லையா, அதற்காக நாளைக்கு கோர்ட்டுக்கு போக வேண்டும், நீ காலையில் ரெடியாக இரு, அங்கு யார் என்ன கேட்டாலும் தலையை மட்டும் ஆட்டு என்று பாக்யாவை ஏமாற்றி கோர்ட்டுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளார். நாளை கோர்ட்டில் என்ன நடக்கப் போகிறது என்பதை நாளை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











