Baakiyalakshmi serial: ஆட்டம் ரொம்ப நாள் நீடிக்காது.. பாக்கியாவிடம் சவால் விட்ட கோபி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
தொடர் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தன்னுடைய மகன்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க பாக்கியா போராடிய நிலையில் அவரது வாழ்க்கையையே போராட்டமாக்கியுள்ளார் கோபி.

பழனிச்சாமியுடன் பாக்கியா பேசிக் கொண்டிருந்ததை பெரிய விஷயமாக்கி தன்னுடைய அம்மா ஈஸ்வரியுடன் இணைந்து அதை பிரச்சினைக்குள்ளாக்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. என்றபோதிலும் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளது. இதனால் முதலிடத்தில் மாஸ் காட்டி வந்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரில் லீட் கேரக்டரில் நடித்துவரும் சுசித்ராவின் கேரக்டர் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கேள்விக்குறியான வாழ்க்கை: கேள்விக்குறியாக மாறிய தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார் பாக்கியா. ஆனாலும் மாலினி -செழியன் விவகாரம் ஜெனிக்கு தெரியவந்ததால் அவர் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியேறுகிறார். இதனால் பித்து பிடித்தவர் போல மாறுகிறார் செழியன். தொடர்ந்து அவரும் பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினரும் ஜெனியை சமாதானப்படுத்த முயல்கின்றனர். ஆனால் அந்த விஷயத்தில் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கிறது.
எழிலை பின்தொடரும் கணேஷ்: இதையடுத்து இறந்து போனதாக கருதப்பட்ட அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் தற்போது உயிருடன் வந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்க அவரிடம் ஒரு மாத காலம் அவகாசம் கேட்கிறார். தன்னுடைய மனைவி மற்றும் மகளை தன்னுடன் அழைத்து செல்ல அவர் உறுதியுடன் இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் எழிலை அவர் பின்தொடர்வதை பார்க்க முடிகிறது. சந்தேகத்துடன் எழில் திரும்பி பார்ப்பதும் இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.
பாக்கியாவை கொச்சைப்படுத்திய கோபி: வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிச்சாமி மற்றும் பாக்கியா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பிரச்சினைக்குள்ளாக்குகிறார் கோபி. தன்னுடைய அம்மாவுடன் இணைந்துக் கொண்டு பாக்கியாவின் உறவை கொச்சைப்படுத்தி பேசுகிறார். அவர் குடும்ப கௌரவத்தை குலைப்பதாகவும் இருவரும் கொட்டித் தீர்க்கின்றனர். ஈஸ்வரி ஒருபடி மேலே போய், பழனிச்சாமியால்தான் குடும்பத்தில் அதிகமான குழப்பங்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகிறார்.
பாக்கியாவிடம் கோபி சவால்: இதையடுத்து எழில், செழியன் மற்றும் இனியா ஆகியோர் தங்களின் அம்மா பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்கின்றனர். இதையடுத்து அங்குவரும் ராதிகாவும் பாக்கியாவிற்கே சப்போர்ட் செய்கிறார். இதனால் கோபி குழப்பம் அடைகிறார். பாக்கியா தன்னுடைய அப்பா முதல்கொண்டு அனைவரையும் தன்பக்கம் இழுத்துள்ளதாக விமர்சிக்கிறார். அதை குலைப்பேன் என்றும் பாக்கியாவிடம் சவால் விடுகிறார். பாக்கியாவின் ஆட்டம் அதிக நாள் நீடிக்காது என்றும் அவர் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
முடிவை மாற்றிய கோபி: தன்னுடைய உடல்நிலை சரியானவுடன் வீட்டை விட்டு வெளியில் செல்லவே தான் திட்டமிட்டதாகவும் ஆனால் தற்போது தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் பாக்கியாவிடம் கோபி கூறுகிறார். தற்போது அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் பாக்கியா வைத்துள்ளதாகவும் அதை விரைவில் குலைத்து, அவரை தனிமரமாக மாற்றிக் காட்டுவேன் என்றும் கோபி சவால் விடுவதையும் இன்றைய எபிசோடில் பார்க்க முடிகிறது.
விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் இந்த வார டிஆர்பியில் மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. இந்த சீரியல் தற்போது சேனலின் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்தடுத்து தன்னுடைய மகன்களின் பிரச்சினைகளில் உழன்றுக் கொண்டிருந்த பாக்கியாவிற்கு தற்போது கோபி மூலம் ஏற்பட்டுள்ள தன்னுடைய பிரச்சினையை தீர்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. அவரது அடுத்தடுத்த பிசினசும் தற்போது முடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











