விஷாலுக்கு லட்சுமி மேனன் கொடுத்த முத்தத்தை விஜய் டிவியில் பார்க்கலாம்!

By Mayura Akilan

தேர்தல் பரபரப்பை விட இன்றைக்கு இணையதளங்கள், ஊடகங்களில் அதிகம் பரபரப்பாக பேசப்படுவது விஷால் - லட்சுமி மேனன் லிப் லாக் சீன்தான்.

புன்னகை மன்னன் படத்தில் கமல் - ரேகா முத்தக் காட்சியை விட பிரபலமடைந்துவிட்டது நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷால் - லட்சுமி மேனன் முத்தக்காட்சி.

இதைத்தவிர அந்த படத்தில் வேறு முக்கிய கதை அம்சமே இல்லை என்பதைப் போல அந்த ஒரு சீனை எடுக்கவே கூடாது என்று சென்சாரிடம் மல்லுக்கட்டி யுஏ சான்றிதழ் வாங்கி வந்தார் விஷால்.

விஜய் டிவி உரிமம்

விஜய் டிவி உரிமம்

இப்போது கதை அதைப்பற்றியதல்ல. நான் சிகப்பு மனிதன் படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றி விட்டது என்பதுதான்.

தனி கெத்துதான்…

தனி கெத்துதான்…

படம் ரிலீசாகி தியேட்டரில் ஓடுதோ இல்லையே சேனல்களில் போட்டு விளம்பரம் மூலம் சம்பாதித்து விடுவார்கள். அதற்காகவே புதுப்பட உரிமையை வாங்க ஒரு போட்டியே நடக்கிறது இங்கே.

பாண்டியநாடு தவறவிட்டவர்கள்

பாண்டியநாடு தவறவிட்டவர்கள்

விஷால் படங்கள் சரியாக போகாத காரணத்தால் முதன் முறையாக விஷால் தயாரித்து நடித்த பாண்டியநாடு படத்தை தவறவிட்டனர். அதை ராஜ் டிவி லாவகமாக கைப்பற்றி வருமானத்தை அள்ளியது.

நான் சிகப்பு மனிதன்

நான் சிகப்பு மனிதன்

எனவே இம்முறை விஷால் - லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்த நான் சிகப்பு மனிதன் படத்தின் சேட்லைட் உரிமத்திற்கு தனி போட்டியே நிலவியது. அதில் கொஞ்சம் வருமானம் பார்த்துவிட்டார் விஷால்.

தூக்க வியாதி

தூக்க வியாதி

இந்த படம் நரம்பு தொடர்பான தூக்க வியாதியால் பாதிக்கப்படும் இளைஞனைப் பற்றிய கதையாம். திரு இயக்கியுள்ளார். படத்தின் புரமோசன் வேலைகளை விஜய் டிவி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.

தமிழ்புத்தாண்டில் சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்புத்தாண்டில் சிறப்பு நிகழ்ச்சி

ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு தினத்தன்று விஜய் டிவியில் நான் சிகப்பு மனிதன் படத்தின் சிறப்பு முன்னோட்டம், பின்னோட்டம் சைடோட்டம் பார்க்கலாம். முத்தக்காட்சியை எதிர்பார்த்து அதை விஜய் டிவி ஒளிபரப்பா விட்டால் அதற்கு தட்ஸ் தமிழ் நிர்வாகம் பொறுப்பல்ல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X