காதலரை கரம் பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. கலந்து கொண்ட சீரியல்கள் நடிகர்கள்!
சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலில் ஒன்றாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு இன்று எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவருக்கு பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ரோஷ்னி ஹரிப்ரியன். இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான இந்த சீரியலில் நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்த பாதியில் வெளியேறினார். இதையடுத்து அந்த சீரியலில் வினுஷா தேவி நடித்தார். ரோஷ்னி ஹரிப்ரியன் திடீரென வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து விதவிதமாக சமைத்து நடுவர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆனால், இறுதிப்போட்டிக்கு முன்பாக ரோஷ்னி ஹரிப்ரியன் வெளியேறினார்.

பாரதி கண்ணம்மா நடிகைக்கு கல்யாணம்: சூரி நடித்த கருடன் படத்தல் அங்கயர்கண்ணி என்ற ரோலில் நடித்த ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு கடந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்தது எனலாம். காளிவெங்கட் நடித்த 'மெட்ராஸ் மேட்டினி என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார். அதைத் தொடர்ந்து விஜய்சேதுபதி, நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி படத்தில் விஜய்சேதுபதியின் தங்கை நடித்தார். இந்த இரண்டு படங்களும் நல்ல வசூலை அள்ளி நடிகை ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.

வாழ்த்தும் பிரபலங்கள்: இந்நிலையில் இன்று ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு நெருங்கி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. தனது காதலர் சுந்தரமூர்த்தி என்பவரை கரம் பிடித்துள்ளார். இந்த திருமணத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண், ஃபரீனா, காவியா அருண்மொழி, கண்மணி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி உள்ளனர். இணையத்தில் டிரெண்டாகி வரும் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இல்லற வாழ்க்கையில் இணைந்து இருக்கும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











