பத்து வருட ரகசிய காதல்.. எளிமையாக நடந்த திருமணம்.. ரோஷ்னியின் திடீர் திருமணத்தின் பின்னணி!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலில் ஒன்றாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ரோஷ்னி ஹரிப்ரியன். இவருக்கு கடந்த 15ந் தேதி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மிகவும் எளிமையாக முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது பத்து வருட காதல் கதை என்பது இப்போது தான் தெரியவந்துள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ரோஷ்னி ஹரிப்ரியன். இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான இந்த சீரியலில் நடித்து வந்த ரோஷ்னி சீரியலில் இருந்த பாதியில் வெளியேறினார். இதையடுத்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விதவிதமாக சமைத்து அசத்தினார். பின் சினிமாவில் என்ட்ரியானரோஷ்னி, சூரி நடித்த கருடன் படத்தல் அங்கயர்கண்ணி என்ற ரோலில் நடித்தார். அதன்பின், காளிவெங்கட் நடித்த 'மெட்ராஸ் மேட்டினி என்ற படத்திலும், விஜய்சேதுபதி, நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாக நடித்திருந்தார்.

Bharathi Kannamma serial marriage
Photo Credit:

பாரதி கண்ணம்மா சீரியல்: இந்நிலையில், திடீரென நடிகை ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு நெருங்கி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண், ஃபரீனா, காவியா அருண்மொழி, கண்மணி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இணையத்தில் டிரெண்டாகி வரும் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் மாப்பிள்ளை சுந்தரமூர்த்தி யார் என அலறி ஆராய்ந்த போது தான் அவர் இசையமைப்பாளர் என்பது தெரியவந்துள்ளது. இவர் இரண்டு வயதில் இருந்தே முறைப்படி இசையை கற்றுள்ளார்.

மாப்பிள்ளை யார்: அதோடு மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளை இயக்குநர் நிகழ்ச்சிக்கும் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கும் இசையமைத்து இருக்கும் இவர் நயன்தாரா நடித்த ஐரா திரைப்படத்திற்கு முதன் முதலாக இசையமைத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் இசையமைத்த முதல் படத்தில் வரும் "மேகதூதம் பாடவேண்டும் மேனி மீது சாரல் வேண்டும்" என்கிற பாடல் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாக உள்ளது. இதைத் தொடர்ந்து, 8 தோட்டாக்கள், ஜீவி1, ஜீவி2, பெருசு, ரங்கோலி, பொம்மை நாயகி போன்ற திரைப்படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார்.

Bharathi Kannamma serial marriage
Photo Credit:

பத்து வருட காதல்: இப்படி ரெண்டு பேருமே பிரபலமாக இருக்கும் போதும், எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தான் நடந்திருக்கு, இதனால் இது அரேஞ்ச் மேரேஜா, அதனால் தான் இவ்ளோ எளிமையா நடந்திருக்கு என நாம நினைத்தபோது தான். 2016 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ரோஷ்னியின் போட்டோவை போட்டு ஒரு பதிவை போட்டு இருக்காரு, அந்த போட்டோவுக்கு ரோஷ்னியும் லைக் போட்டு இருக்காங்க அந்த விஷயம் இப்போது தான் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல் இவங்க ரெண்டு பேரும் காதலை வெளியில சொல்லாமல் ரகசியமாக லவ் பண்ணி கடைசியில் இப்போ திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X