Bigg boss 7 contestant Vichitra: பிக்பாஸ் எலிமினேஷன்.. பார்ட்டி வைத்து கொண்டாடிய விசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துவக்க போட்டியாளராக இணைந்த நடிகை விசித்ரா, சக போட்டியாளர்களுக்க சிறப்பான வகையில் டஃப் கொடுத்து நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தார். கடந்த வாரத்தில் அவர் எலிமினேட் ஆகியுள்ள நிலையில், ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்தார். இந்நிலையில் அவரது எலிமினேஷனும் நிகழ்ச்சியில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை சந்தித்துள்ள விசித்ரா, உணர்ச்சி வசப்பட்டதை பார்க்க முடிந்தது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த அவரது கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து விசித்ரா உணர்ச்சிவசப்பட்டதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து அவர்கள் மிகவும் கேஷுவலாக விசித்ராவிடம் பேசியதை பார்த்த ரசிகர்கள் பாராட்டினர். முன்னதாக தன்னுடைய பிள்ளைகளை விசித்ரா கண்ணில் காட்டாமல் அவரது கணவர், அவரை கலாய்த்ததையும் பார்க்க முடிந்தது. இதனால் கண்கலங்கிய விசித்ரா, பின்பு அவரை பார்த்தவுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

Vijay TV bigg boss 7 contestant Vichitra celebrates her elimination with Party

பிக்பாஸ் 7 போட்டியாளர் விசித்ரா: நடிகை விசித்ரா ரஜினி, வடிவேலு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். ரஜினியுடன் விசித்ரா நடித்த முத்து படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து படங்களில் நடித்த விசித்ரா, திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்ட இவர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தலை காட்டினார். தொடர்ந்து தற்போது பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அதிரடியாக செயல்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விசித்ரா, ஏறக்குறைய 100 நாட்களில் நிகழ்ச்சியில் இருந்துள்ளார்.

விசித்ரா எலிமினேஷன்: தொடர்ந்து பைனல் கன்டஸ்டண்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் ஆகியுள்ளார் விசித்ரா. முன்னதாக பணப்பெட்டியை இவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறினார். இந்நிலையில் விசித்ராவின் எலிமினேஷன் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதை தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார் விசித்ரா.

Vijay TV bigg boss 7 contestant Vichitra celebrates her elimination with Party

விசித்ராவின் பார்ட்டி: இந்த பார்ட்டியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்ட்டியில் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டதை இந்த வீடியோ மூலம் தெரிந்துக் கொள்ள முடிந்தது. இந்த வீடியோவை அம்மு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், ஒழுங்காக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு விசித்ரா சென்றிருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்த வீடியோ காணப்படுகிறது. விசித்ரா தன்னுடைய கணவர் உள்ளிட்ட அனைவரையும் பார்த்த சந்தோஷத்தில் காணப்பட்டார்.

ஏறக்குறைய 100 நாட்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் துவக்கம் முதலே விசித்ராவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் முதலில் ஜோவிகாவுடன் தன்னுடைய விவாதத்தை துவங்கினார். இவர்கள் இருவருக்கிடையில் கல்வி குறித்து நடந்த விவாதம் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்களுடன் சண்டை, சச்சரவுகள் என்று விசித்ராவின் கேம் களைகட்டிய நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த தினேஷுடன் எடுத்ததற்கெல்லாம் முட்டிக் கொண்டார் விசித்ரா. அவரது சொந்த வாழ்க்கை குறித்து பேசி, கமல்ஹாசனிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X