விரைவில் வாயாலேயே குறும்படம் காட்டுவேன்.. பிக்பாஸ் எலிமினேஷனுக்கு பிறகு ஃபேட்மேன் முதல் வீடியோ!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த 6ம் தேதி சிறப்பான மற்றம் பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியது. பிக்பாஸின் கடந்த 7 சீசன்களில் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்ற கமல்ஹாசன் இந்த சீசனில் இருந்து விலகிக் கொண்ட நிலையில், தற்போது 8வது சீசனின் புதிய ஆங்கராக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இணைந்த நிலையில் அவர்களை சிறப்பான அறிமுகத்துடனும் தனக்கேயுரிய ஸ்டைலில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. எப்போதும் இல்லாத திருநாளாக இந்த முறை ஆண்கள், பெண்கள் சமமான எண்ணிக்கையில் நிகழ்ச்சியில் இணைந்ததுடன், தனித்தனியாக செயல்பட்டனர்.

televisiion bigg boss tamil 8 ravindar 8

பிக்பாஸ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழா நிகழ்ச்சியுடன் துவங்கிய நிலையில், நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட்டாக களமிறங்கிய விஜய் சேதுபதியின் வரவு இந்த நிகழ்ச்சியை மேலும் பிரம்மாண்டமாக ஆக்கியுள்ளது. தனக்கேயுரிய நையாண்டி, கம்பீரத்துடன் இவர் துவக்க விழாவிலேயே போட்டியாளர்களை எதிர்கொண்டார். நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இணைந்த நிலையில், அவர்களை அனைவரையும் சிறப்பாக அறிமுகம் செய்து, தனக்கேயுரிய ஸ்டைலில் சிலரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி.

முதல் எவிக்ஷன் ரவீந்தர்: இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், இவர்களில் தயாரிப்பாளரும் விமர்சகருமான ஃபேட்மேன் ரவீந்தர் மிகவும் முக்கியமான போட்டியாளராக கருதப்பட்டார். இவரும் பிக்பாஸ் வீட்டில் தனக்கேயுரிய ஸ்டைலில் தனது ஆட்டத்தை ஆடவே செய்தார். ஆனாலும் இவர் பிக்பாஸ் வீட்டிலும் விமர்சனத்தையே தொடர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் இவரது பெயரும் இருந்த நிலையில், இறுதியல் இவருக்கும் ஜாக்குலினுக்கும் இடையில் நடந்த போட்டியில் இவர்தான் குறைவான புள்ளிகளுடன் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷனாக மாறினார்.

ஃபேட்மேன் முதல் வீடியோ: முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து விமர்சனங்களை வெளியிட்டு அதன்மூலம் அதிகமான வருமானத்தை பெற்றுவந்த ரவீந்தர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியும் உள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர் என்ற அடையாளம் இவருக்கு மேலும் அதிகமான விமர்சனங்களுக்கான வாய்ப்புகளை பெற்றுத்தந்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய எலிமினேஷனை தொடர்ந்து தற்போது முதல்முறையாக வீடியோவை வெளியிட்டுள்ளார் ஃபேட்மேன். இந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் தனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், தெரிவிக்காதவர்கள் என அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி: நிகழ்ச்சிக்கு சென்ற நிமிடத்திலிருந்து கடைசி நிமிடம்வரையில் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நியாயமாக நடந்துக் கொண்டதாகவும் ரவீந்தர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தங்களின் நேரத்தை ஒதுக்கி. விமர்சித்து தங்களுக்குள் சண்டைகளும் போட்டுக் கொண்ட ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்த பல சந்தேகங்கள் ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் அதையெல்லாம் தயாராக வைத்துக் கொள்ளும்படியும் விரைவில் அதுகுறித்து தான் பேசுவேன் என்றும் வாயால் குறும்படம் காட்டுவேன் என்றும் ஃபேட்மேன் மேலும் கூறியுள்ளார்.

விமர்சனங்கள் அவரவர் கருத்துக்களே: உள்ளே சென்று தான் தன்னுடைய ஆட்டத்தை மட்டுமே ஆடியதாகவும் ஆனால் தான் உள்ளே சென்றும் விமர்சனம் செய்ததாகவே பலரும் கருத்துக்களை கூறியதாகவும் ரவீந்தர் இந்த வீடியோவில் மேலும் தெரிவித்துள்ளார். தான் பலரின் யுகேந்திரன், காயத்ரி, ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலரின் விமர்சனங்களையும் பார்த்ததாகவும் இவர்களின் விமர்சனங்களை பார்த்தபோது 7 நாட்களும் தான் சம்பவம் செய்ததையும் நினைத்து பெருமையாகவே இருந்ததாக கூறியுள்ளார். இவர்களின் கருத்துக்கள் விமர்சனங்கள் மட்டுமே, உண்மையில்லை என்றும் ஃபேட்மேன் தெரிவித்துள்ளார். இதனிடையே பிக்பாஸ் ஆட்டத்தை தன்னுடைய பார்வையில் அடுத்தடுத்து கூறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X